
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில்,சீறிப்பாய்ந்த ஏவுகணை, முன் கூட்டியே திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாகத்
தாக்கியது.
அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீற்றர் அகலம் 2 மீற்றர் ஆகும்.
5,000 கிலோமீற்றர் தூரம் வரை இது தாக்கக் கூடியது. ஒரு டன்னுக்கும் மேற்பட்ட எடை கொண்ட அணு
ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி
வடிவமைக்கப்பட்டுள்ளது.
Inter-Continental Ballistic Missile-I CBM எனப்படும் மூன்று பாகங்களைக் கொண்ட இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் பகுதி
ராக்கெட் தனியே கழன்றுவிடும்.
அடுத்து இரண்டாவது ராக்கெட்
செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன்
பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு
கொண்டு செல்லும். இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள
கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு,
அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும். இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.
3வது
கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட
24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30
மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.

இதன் வேகத்தைப் பார்த்தால், ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும் போர்
விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்
வல்லமை உடையது.அக்னி-5 ஏவுகணையை
மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று
தெரிகிறது.
இதுவரை பொருளாதார மற்றும் ஆயுத பலத்தில் இந்தியா 5 வது இடத்திலும் இராணுவ பலத்தில் 3வது இருக்கின்றது.
கண்டம் விட்டு கண்டம் போய் தாக்கும் அதி நவீன ஏவுகணைகள் மற்றும் அந்நாடுகளின் இராணுவ வீரர்கள் எண்ணிக்கைகளை பார்த்தால்,
அமெரிக்கா
வீரர்கள் 1,569,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 450
சீனா
வீரர்கள் 2,285,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 66
இந்தியா
வீரர்கள் 1,325,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 01
ரஷ்யா
வீரர்கள் 956,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 292
இங்கிலாந்து
வீரர்கள் 174,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக