வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் வெற்றிகரமாக முடிந்தது



ஹிந்தியில் வெளியாகியுள்ள கமலின் விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் முடிந்து ரசிகர்கள் வெளியே வந்து விட்டனர். டில்லியில் மட்டும் படம் 20 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தன.
 
ரசிகர்கள் மனநிலை எப்படி உள்ளது என தியேட்டர் வாசலில் அசெஸ்மென்ட் செய்து வெளியிட்டுள்ள CNN-IBN, “ரசிகர்கள் புன்னகையுடன் வெளியே வந்தார்கள். படத்தில் இஸ்லாத்துக்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ காட்சிகள் ஏதுமில்லை. படம் சூப்பராக உள்ளது” என்று கூறியுள்ளது.
இந்த படம் தேசிய விருதுகளை நிச்சயம் வெல்லும். இந்திய திரையுலகையே விஸ்வரூபம் அசைத்துக் காட்டும்” என்ற காமென்ட்டையும் CNN-IBN வெளியிட்டுள்ளது.

“படத்தில் இஸ்லாத்துக்கு எதிரான காட்சிகள் இருந்தால் தடைசெய்யப்படும்” என அறிவிக்கப்பட்ட உத்திரபிரதேசத்திலும், முதலாவது காட்சி எந்தவிட இடையூறும் இன்றி ஓடி முடிந்துள்ளது.
டில்லி தியேட்டர்களுக்கு முன் பெரியளவில் விளம்பரங்கள் ஏதுமில்லை. தியேட்டர் இணைத்தளத்தில்தான் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பு இருந்தது. ஆனால், முதல்நாள் ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவில் உள்ளதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

படத்துக்கு தடை என வெளியான செய்திகள், அட்டகாசமான விளம்பரத்தை கொடுத்துள்ளன. தமிழகத்துக்கு வெளியே விஸ்வரூபம், எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை பெறும் என்கிறார்கள்.

 நன்றி விறுவிறுப்பு 

3 கருத்துகள்:

  1. உண்மையிலேயே படம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறதோ.

    பதிலளிநீக்கு
  2. வட இந்தியாவில் அமைதியாக ரிலீசானது விஸ்வரூபம்... ஆனால் கூட்டம் சுமார்தான்!

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/viswaroop-not-pulled-crowd-on-the-first-day-169021.html

    பதிலளிநீக்கு