செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சச்சின் பிறந்த நாள்


 கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள்.  1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி மும்பையில் பிறந்த சச்சின் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுறார். அவருக்கு பிறந்த நாள்  வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
டெண்டுல்கர் தனது பிறந்தநாளை மனைவி அஞ்சலியுடன் சண்டிகாரில் உள்ள அகார்ட் நட்சத்திர விடுதியில் கொண்டாடினார். மும்பை அணியை சேர்ந்த தினேஷ் கார்த்திக், பிராங்ளின், ஒஜா, போலார்ட் உட்பட வீரர்கள் டெண்டுல்கரை சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சச்சின் 188 டெஸ்டில் விளையாடி 51 சதமும், 65 அரை சதமும் அடித்து 15, 470 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 463 ஒருநாள் போட்டியில் விளையாடி 49 சதமும், 96 அரை சதமும் அடித்து 18,429 ஓட்டங்கள் எடுத்துள்ள இந்த கிரிக்கெட் மாமனிதனுக்கு வாழ்த்து தெரிவிப்பபதில் பெருமையடைகின்றேன்.

கிரிக்கெட்டில் அதிக சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் தான் அவர் சாதனைகளை ஏற்கனவே அலசிவிட்டடேன். சச்சினின் சாதனைகள் பற்றிய பதிவை பார்ர்காதவர்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

வெள்ளி (venus)


இதற்கு முதல் பதிவில் புதன் கோள் பற்றி பார்த்தோம். ஆடுத்து வெள்ளி பற்றி பார்ப்போம்.

சூரியனிலிருந்து மூன்றாவதாகவும் நமது பூமிக்கு மிக அன்மையிலும்  அமைந்துள்ளது. இரவு நேரத்தில் நிலவிற்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானமாகும். வௌளியை காலை நட்சத்திரம் (விடி வெள்ளி)மாலை நட்சத்திரம் (அந்தி வெள்ளி) என்றும் அழைக்கப்படுகின்றது அதற்கான காரணம் சூரிய உதயத்துக்கு முன்னும், சூரிய மறைவிற்கு பின்னும் வெள்ளி உச்ச பிரகாசமடைகின்றது.

வெள்ளி தன்னை தானே சுற்ற எடுக்கும் காலம் 243 (243.0187) நாட்கள் 
சூரியனை சுற்ற எடுக்கும் காலம் 227 .4 நாட்கள்

 கோள்களிலேயே ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்காத கோளும் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் காரணம் சாதாரண மக்களுக்கும் எளிதாக காணக்கூடியதாக இருக்கன்றது. ஆகையினால் ஆரம்ப காலல மக்களும் வெள்ளி பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். பாபிலோனியர்கள் கூட வெள்ளி பற்றி எழுதி வைத்துள்ளனர். ஆனால் பண்டைய கிரேக்கர்கள் விடி வெள்ளியும் அந்தி வெள்ளியும் ஒன்றென்பதை அறியாத காரணத்தினால் இரு வேறு பெயர்களையும் சூட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்து. வெள்ளிக்கு எவ்வித உப கோள்களும் இல்லை.

  1. வெள்ளியின் சராசரி ஆரை 108,208,930 கிமீ, 
  2. சுற்றுக்காலம் 224 (224.701) நாட்கள்
  3. பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம் (Synodic Period) 583 (583.92) நாட்கள்
  4. சராசரிச் சுற்று வேகம் 35.0214 கிமீ/செக்
  5. அச்சின் சாய்வு 3.39471°

பௌதீக இயல்புகளை பார்த்தால்

மையக்கோட்டு விட்டம் 12,103.6 கிமீ
மேற்பரப்பளவு 4.60×108 கிமீ 2
திணிவு 4.869×1024 கிகி
சராசரி அடர்த்தி 5.24 கி/செமீ 3
மேற்பரப்பு ஈர்ப்பு 8.87 மீ/செக்2
சுழற்சிக் காலம் 243.0187 நாட்கள்
அச்சுச் சரிவு 2.64°
தப்பும் வேகம் 10.36 கிமீ/செக்

பௌதீக இயல்புகளை பார்த்தால்

வளியமுக்கம் 9321.9 kPa
கரியமில வாயு 96%
நைட்ரஜன் 3%





கோள்களிலேயே வெள்ளியில் மட்டும்தான்  சூரியன் மேற்கே உதிக்கின்றது. இது வெள்ளி கிரகத்திற்கே உள்ள தனிச் சிறப்பு.அதற்கு காரணம் வெள்ளி தனது அச்சில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழல்கின்றது. பூமியும் மற்ற கோள்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழல்கின்றது அதனால்  சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்றது.



திங்கள், 23 ஏப்ரல், 2012

புதன் (mercury)


முதல் பதிவில் பூமி (Earth) பற்றி பார்த்துவிட்டதால், இன்று புதன் (mercury) பற்றி பார்ப்போம். சூரியனுக்கு மிக அருகில் முதலாவது கோளாக அமைந்துள்ளதால் மிகவும் வெப்பமாக காணப்படுகின்றது.  சூரியனை நோக்கிய பகுதியில் வெப்பநிலை 800 பாகை பரனைட்டும் எதிர்ப்புறத்தில்      -300 ( மைனஸ்) பாகை பரனைட்டும் ஆகக் காணப்படுகின்றது.

புதன், கோள்களிலேயே மிகவும் சிறியதாகும். அளவில் நம் பூமியை விட 3 மடங்கு சிறியதாகும். இயற்கையாகவே புதனுக்கு துணை கோள்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2008 ஜனவரியல் அனுப்பப்பட்ட மெசஞ்சர் விண்கலம்  2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு தற்போது புதனின் துணைக்கோளாக மாறியது. இவ்விண்கலம் புதனுக்கு 2 வதாக அனுப்பப்ட்டதாகும். முதலாவதாக அனுப்பட்ட விண்கலம் மாரினர் 10 (Mariner 10) : 1974-1975.

தன்னை தானே சுற்றிக் கொள்ள 5 நாட்களும் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 ( 87 நா 23.3 ம) நாட்களும் செல்கின்றன இது பூமியை விட 59 மடங்கு அதிகமாகும்.அதனால் புதனில் இரவு பகல் மாறுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கின்றன. சூரியனைச் சுற்றி சுற்று வட்டப் பாதையில் 50 Km/s (47.8725 Km/S) வேகத்தில் பயணிக்கின்ற போதிலும் தன்னைத் தானே சுற்றும் வேகம் மிகக் குறைவு.

வளி மண்டல இயல்புகளை பார்த்தால்,

பொட்டாசியம்31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%

பௌதீக இயல்புகள்

  •  மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
  • மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ 2
  • திணிவு 3.302×1023 கிகி
  • அடர்த்தி 5.43 கி/சமீ
  • மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
  • சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
  • சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
  • சராசரி சுற்று வேகம் - 47.8725 Km/S

புதனில் கடினமான பாறைகளுடன் கூடிய தரை மேற்பரப்பில் சூரிய குடும்பம் தோன்றியதிலிருந்து இலட்சக் கணக்கான விண் கற்களும் வால் வெள்ளிகளும் மோதி வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டகுழிகள் இதன் மேற்பரப்பில் காணப்படுகின்றன. சூரியனுக்கு மிக அண்மையில் இருப்பதால் புதனைப் பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டு வந்துள்ளது எனலாம். இதன் ஆராய்ச்சி 75% க்கும் குறைவானமாக இருக்கும் என தெரிகிறது. (சரியாக தெரியவில்லை)
 

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பூமி



உயிரினங்கள் வாழ மிக பொருத்தமான கிரகம் நமது பூமியாகும். சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ளது.  பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி மூலம் சூரியனுடன் சேர்ந்து 450  கோடி வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி ஒரு பில்லியன் வருடங்களே ஆகின்றன. 
 புவியின்  மேற்பரப்பில் 71%  வரை உப்பு நீருள்ள கடலாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. மேற்பரப்பு மூலகங்களின் அளவை பார்க்கும் போது சிலிக்கன்  60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன. பூமியில் இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும்அலுமினியம் (1.4%), மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது, மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகம் எனலாம்.
பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365 1/4 நாட்கள்
சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுழல்கிறது
சுற்றளவு (கிடை அச்சில்) - 40 075.02 Km
பூமியின் நிறை ஏறக்குறைய 5.98×1024 Kg
நீள் கோள மேற்பரப்பளவு - 510 072 000 Km2
சராசரி அடர்த்தி - 5.5153 g/cm3
 
துணைக் கோள் - 1 (சந்திரன்)

535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்க எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியை போன்ற பாலுண்ணிகள் மட்டுமே.

புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது  மேலும் இச்சூழல் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.