ஞாயிறு, 1 ஜனவரி, 2012

2012 புது வருடம்

இந்த வருடம் கட்டாயம் ஏதாவது புதுமைகள் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் நினைத்து எதுவுமே செய்யாமல் (முடியாமல்) காத்திருக்கும் என்னை போன்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

''நம் சகோதரர்கள் சிறையில் வாடுகிறார்கள்
நம் இறத்த உறவுகள் தமது வாழ்க்கையை
தொடர முடியாமால் தவிக்கிறார்கள் 
நமது தாய் தந்தையார் இருக்கின்றார்களா? இல்லையா ?
என்று கூட தெரியாமல் வாடும் நம் உறவுகள்,
நமக்கு இந்த புதுவருட கொண்டாட்டம் தேவையா?
என்பது ஒரு கேள்வி குறியே!

இந்த வருடமாவது தமிழனுக்கு நிம்மதியாக, சுதந்திரமாக
அனைவருக்கும் 3 வேளை சாப்பிட ஒரு வாழ்க்கை கொடு இறைவா
இந்த வருடத்திலாவது உன்னை கொஞ்சமாவது   நம்புவதற்கு.
 ''கும்பிட துடிக்கும் கரங்களை விட உதவிட துடிக்கும் ஒரு கரம் பலமானவை''.
உதவி செய்ய மனமிருந்தும் வழியில்லாமல் (பணமும் கூட) நிறைய பேர், அவர்களுக்காவது ஒரு வழி விடு இறைவா உன்னை நம்ப முயட்சியவது  செய்கிறேன்.

வருடம் மட்டும் புதிதாய் பிறக்கின்றது நம் வாழ்வில் புதிதாய் எதுவும் பிறக்கவும் மாறவும் இல்லை.
பசி கொடுமை குறையவில்லை , கண்ணீர் குறையவில்லை,
மனிதனில்  மனிதம் இல்லை.
ஒவ்வொரு வருடமும் வயது அதிகரிப்பதை  போன்று
அகதிகளும் அநாதைகளும் அதிகரிக்கின்றார்கள்
''அனாதை குழந்தைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கும் தேவை குடும்ப கட்டுப்பாடு (கமல்)

பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கின்ற புதிய மனம் என்று நமக்கு வருமோ அன்றுதான் புது வருடம்.
நடக்குமா ? 
அதிகரித்த எதிர்பார்ப்புக்கள்
நிறைவேறிய கற்பனைகளாய்
இந்த ஆண்டாவது அமையட்டும்
நம் இரத்த உறவுகளுக்கு நிம்மதி கிடைக்கட்டும்.

''நன்றி''


பி.கு : நான் நினைத்த கருத்துக்கள் அனைத்தையும் பதிய முடியவில்லை . பிழையிருப்பின் மன்னியுங்கள், இது என் முதல் பதிவு.