சனி, 8 டிசம்பர், 2012

விஸ்வரூபம் : நான் சாப்பிட்டு உங்களுக்கு

எனது வெற்றிக்கு ரசிகர்கள் தான் காரணம், அவர்கள்தான் எனது பலம் என "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

ஜனவரி 11-ல் திரைக்கு வர இருக்கும் கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். 
விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழா நேற்று மதுரை, கோவை சென்னையில் நடந்தது. இறுதியாக சென்னையில் நடந்த விழாவில் கமல் பேசியதாவது: மதுரை, கோவை நகரங்களில் கிடைத்தது ஆர்ப்பாட்டமான அன்பு. சென்னையில் கிடைத்தது அமைதியான அன்பு. நான் குழந்தையாக இருந்தபோது தூக்கி கொஞ்சியவர்கள், நான் இளைஞனாக இருந்தபோது ரசித்தவர்கள். கொஞ்சம் வயதானபிறகு பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களும், ரசிகர்களும்தான் எனக்கு அச்சாணி, ஆணிவேர். இந்த அச்சாணிகளின் துணையால்தான் நான் கழன்று விடாத சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறேன். 

என்னை உருவாக்கியவர்கள் முன்னால் எனக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பீத்திக் கொள்ளத்தான் இந்த விழாவை நடத்துகிறேன். சில பேர் மூன்று ஊர்களில் ஹெலிகாப்டரில் சென்று ஆடியோ வெளியிடப்போகிறேன் என்று சொன்னபோது நடக்கிற கதையா பேசுங்க என்றார்கள். இது நடக்கிற கதையல்ல பறக்குற கதையென்பதை நிரூபித்திருக்கிறேன். எனக்கு கரகோஷத்தின் மீது பேராசை உண்டு. அதற்கு அளவே இல்லை. அதற்கு நான் தகுதியானவனா என்று கூட பார்ப்பதில்லை. இந்த கரகோஷமும், ஆர்பாட்டமும், விஸ்வரூபம் படத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். விஸ்வரூபம் எல்லோருக்கும் பிடிக்கும். காரணம் எதையும் நான் சாப்பிட்டு பார்த்து எனக்கு பிடித்திருந்தால்தான் ரசிகர்களுக்குத் தருவேன். விஸ்வரூபம் நான் ரசித்து சாப்பிட்ட விருந்து. உங்களுக்கும் பரிமாறப்போகிறேன் என்றார்.
இவ் விழாவில், பங்கேற்பதற்காக விழா நடைபெற்ற வளாகத்துக்கு ஹெலிகாப்டரில் கமல்ஹாசன் வந்தார். விஸ்வரூபம் இசை சி.டி.யை கமல்ஹாசன் வெளியிட, அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவரும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருமான பத்ரிநாத் பெற்றுக் கொண்டார்.
கமல்ஹாசன் மேடைக்கு வருவதற்கு முன்னர், அவரைப் பற்றி, அவரது நண்பரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியது:
 கமல்ஹாசன் நடிப்பதோடு நின்று விடாமல், திரைக்கதை இயக்குநர், நடன இயக்குநர், இசையமைப்பாளர் என திரைத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியக் கூடிய சகலகலா வல்லவன். சிறந்த நகைச்சுவைத் திறன் உடையவர். தமிழின் மீது அவருக்குப் பிரியம் அதிகம்.

 அதனால் கவிதை எழுதுவதிலும் சிறந்தவராக விளங்குகிறார். படத்துக்குப் படம் அவருடைய உழைப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகச் சிரமத்துடன் சோதனைகளை, சாதனைகளாக மாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே. செய்யுளாக இருந்தாலும், கருத்துகளாக இருந்தாலும் ஒருமுறை கேட்டவுடன், அதை உடனடியாக மனதில் பதிய வைக்கும் ஆற்றல் கமல்ஹாசனிடம் அதிகம். வீட்டில் பெரிய நூலகத்தை வைத்திருக்கிறார். அந்த அளவுக்குப் புத்தகப் பிரியர்.

 எங்கு சென்றாலும் இரண்டு புத்தகங்களை வாங்கும் பழக்கம் அவரிடமும், என்னிடமும் உண்டு. ஒன்று அவருக்கு மற்றொன்று எனக்கு. வட்டார வழக்கில் தமிழ் மொழியைச் மிகச் சிறப்பாக பேசக் கூடியவர் என்றார்.
விழாவில் இளையராஜா, பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், தரணி, லிங்குசாமி, பிரபு, ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வியாழன், 6 டிசம்பர், 2012

விஸ்வரூபம் முதலில் டிவியில்


 விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.


எதிலும் புதுமைகளை படைப்பதில் கமலுக்கு நிகர் கமல் தான். ஹாலிவுட் தரத்தில் தான் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.இல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்டுவோம் என்று தியேட்டர் அதிர்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கமல் தரப்புக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பிரச்னை உருவாகியுள்ளது. 

கமல் திட்டப்படி விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு பெரிய நடிகரின் படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டி.டி.எச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டி.டி.எச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

விஸ்வரூபம் படத்தின் டி.டி.எச் வெளியீட்டு விவகாரம் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்க, கமல் ஹாஸனோ அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகிவிட்டார்.இப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கும் அதே வேளை நாளை 7ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீசும் நடக்கவிருக்கிறது.

சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ள விஸ்வரூபம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கெனவே ஜெயா டிவி வாங்கிவிட்டது. இப்போது இசை வெளியீடு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையும் பெற்றுள்ளது. மூன்று நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் ஜெயா டிவிதான் ஒளிபரப்பப் போகிறது.

திறந்தவெளி மைதானத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவது கமலுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தனது விருமாண்டி பட இசை வெளியீட்டை கேம்பகோலா மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தியவர் கமல் என்பது நினைவிருக்கலாம்.