வியாழன், 23 மே, 2013

ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் சிக்கிய குருநாத் மெய்யப்பன் ஏவிஎம்மின் பேரன்


ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் சிக்கியுள்ள குருநாத் மெய்யப்பன் ஏவிஎம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். ஸ்பாட் ஃபிக்சிங் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல் அணி வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புக்கிகள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள விண்டூ தாரா சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய புள்ளியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என போலீசார் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்நிலையில் அந்த முக்கிய புள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என்றும், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தாம் மெய்யப்பனிடம் தொடர்பு வைத்திருந்ததை விண்டூ தாரா சிங் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவைத்தான் இந்த குருநாத் மெய்யப்பன் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரூபா, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.


இதனிடையே குருநாத் மெய்யப்பன் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும், அதே சமயம் பெரிய தொகையை கட்டி பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இதுவும் சட்டவிரோதம்தான் என்றும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


செவ்வாய், 5 மார்ச், 2013

ஹைதராபாத் டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி


ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
 ஹைதராபாத்தில் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இந்திய அணியின் முரளி விஜய், புஜாரா ஜோடி அபாரமாக விளையாடியது. 
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் 503 ரன்களில் இழந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 266 ரன்கள் முன்னிலை வகித்தது.. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி விளையாடத் தொடங்கியது. 
நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்திருந்தது. இன்று தமது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியைப் போல அஸ்வின் விஸ்வரூபம் காட்டினார். அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது


வியாழன், 7 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்




விஸ்வரூபம்... தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உச்சரிக்கும் சினிமா.

கமலஹாசன் என்ற தமிழ் நடிகர் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கிய சர்வதேச படம். இந்திய உளவுப்பிரிவான 'ரா' அமைப்பின் அதிகாரி தலிபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் ரகசிய திட்டங்களை அறிந்து அவற்றை தடுப்பதோடு அமெரிக்கா மீது தலிபான்கள் நடத்த இருந்த தாக்குதலையும் முறியடிப்பதே கதை...

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் படமாக்கி தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், அவர்களின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகளை கற்பனை கலந்து பிரமாண்டமாய் எடுத்துள்ளார் கமல்.

படத்தின் ஆரம்பம் அமெரிக்காவில் தொடங்குகிறது. கமலஹாசன் 'கதக்' நாட்டிய கலைஞர். அமெரிக்க பெண்களுக்கு நாட்டியம் கற்று கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். பெண்மை கலந்த நளின நடை, ஆண்மையை வெளிகாட்டாத கதாபாத்திரமாக காட்சி அளிக்கிறார்.

இவரது மனைவி பூஜாகுமார். அமெரிக்காவில் உள்ள அணு மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். கமல்-பூஜா இருவரும் கணவன்-மனைவி என்றாலும் அந்தரங்க உறவுகள் எதுவும் நடப்பதில்லை. இது மனைவி பூஜாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதால் தன்னை தொட தயங்குகிறாரோ? என்று எண்ணுகிறார். இதை கண்டுபிடிக்க துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அவர் கமலஹாசனை பின் தொடர்கிறார். அப்போது கமலஹாசன் உண்மையில் ஒரு நடன கலைஞர் இல்லை என்பதும் அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இதற்கிடையே அமெரிக்காவில் அணு கதிர்கள் மூலம் தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டு அதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக அமெரிக்காவின் அணு விஞ்ஞானிகளை தேடி அலைந்தபோது, அவர்களின் கையில் கமலஹாசனை துப்பறிந்த நிபுணர் சிக்கிக் கொள்கிறான். அவனிடம் இருக்கும் ஆவணங்கள் மூலம் கமலஹாசனின் மனைவி பூஜாகுமார் ஒரு அணு விஞ்ஞானி என்பதை தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் துப்பறியும் நிபுணரை சுட்டுக்கொன்று கமலஹாசனையும் பூஜாகுமாரையும் தங்களது ரகசிய இடத்திற்கு கடத்தி செல்கிறார்கள்.

அங்கு பூஜாகுமாரிடம் அணு ரகசியங்களை கேட்கிறார்கள். அவர் சொல்ல மறுக்கவே தீவிரவாதிகள் சித்ரவதை செய்கிறார்கள். இதை பார்த்ததும் கமல் கொதித்து எழுகிறார். அங்கிருந்த தீவிரவாதிகளை அடித்து நொறுக்குகிறார். அவரது ஆக்ரோஷமான சண்டையை பார்த்ததும் மனைவிக்கு பிரமிப்பு... நடன கலைஞராக இருந்த கமலுக்குள் இப்படி ஒரு மறுபக்கமா? என வியப்படைகிறார்.

அதன் பின்புதான் கமல் யார்? என்ற உண்மை அவருக்கு தெரிய வருகிறது. அது படத்தின் 'பிளாஷ்பேக்' கதையாக விரிகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ரா’ அதிகாரி கமல், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறார். அங்கு முல்லா உமரை சந்திக்கிறார். கமலின் திறமைகளை பார்த்த முல்லா உமர் இளம் தலிபான்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணராக கமலை நியமிக்கிறார்.

உருது மொழி தெரியாத கமல், பயிற்சி பெறும் சக வீரர்களிடம் கேட்டு அங்கு உள்ள தலிபான் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார். ஆப்கான் தீவிரவாதிகள் புறாக்களின் கால்களில் அணுக்கதிர்களை பதுக்கி அமெரிக்காவின் நியூயார்க் நகர் மீது மிகப்பெரிய அணுக்கதிர் தாக்குதல் நடத்த திட்டமிடும் தகவல் தெரிய வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் ஆப்கானிஸ்தானில் இருந்து புறாக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது.

போதுமான அணுக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதும் அங்கு தாக்குதல் நடத்த வேண்டிய தலிபான்களும் அமெரிக்கா செல்கிறார்கள். இந்த தகவல் அமெரிக்காவின் உளவுப்படையான எப்.பி.ஐ.க்கு தெரிகிறது. மிரண்டு போன அவர்கள் நேட்டோ படைகள் மூலம் ஆப்கானிஸ்தான் மீது வான்வெளி தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் அங்கிருந்த முல்லா உமரை தவிர மற்ற தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள். முல்லா உமர் மட்டும் அமெரிக்காவுக்கு ரகசியமாக தப்பிச் செல்கிறார்.

இதுபோல கமலும் அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு எப்.பி.ஐ.யின் கையில் கமல் சிக்குகிறார். கமல் இந்தியாவின் 'ரா' அதிகாரி என்று இந்திய தூதரக அதிகாரிகள் எப்.பி.ஐ.க்கு தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் கமல் தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்காவை தகர்க்க என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர் என்பதை விவரிக்கிறார். அவர்கள் அந்த திட்டங்களை கமலுடன் சேர்ந்து தகர்த்து முறியடிக்கிறார்கள். தலிபான்களின் திட்டம் தோற்கடிக்கப்படுகிறது. அமெரிக்கா காப்பாற்றப்படுகிறது. அத்துடன் படம் முடிகிறது.

வணக்கம் போடுவதற்கு முன்பு முக்கிய தீவிரவாதியான முல்லா உமர் அமெரிக்காவை விட்டு தப்பிச் செல்கிறார். இவர் அடுத்து செய்யப்போகும் அதிரடிகள் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகும் என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது.

விஸ்வரூபம் படத்தில் 3 பாடல்கள் வருகிறது. கதக் கலைஞர்கள் பாடும் பாடலாக ஒன்றும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது அதன் பின்னணியில் இசைக்கும் பாட்டாகவும், கமல் எதிரிகளை துவம்சம் செய்யும்போது பாடும் பாடலாகவும் உள்ளது.

படத்தின் பிரமாண்டம் படம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் நடக்கும் சண்டைக் காட்சி. வில்லன்களுடன் கமல் மோதுவது இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத விசித்திரமான சண்டை... இதை இன்னொரு முறை பார்க்க மாட்டோமா? என்று ரசிகர்களை நிச்சயம் துடிக்க வைக்கும். அதை உணர்ந்த இயக்குனர் கமல் அந்த சண்டைக்காட்சியை கதாநாயகி பூஜா மீண்டும் எண்ணிப்பார்ப்பதுபோல உருவாக்கி காட்சிப்படுத்தி உள்ளார்.

படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் அதன் ஒளிப்பதிவு... ஹாலிவுட் படங்களில் மட்டுமே கண்டு வந்த பிரமாண்ட காட்சிகள் விஸ்வரூபத்திலும் காண கிடைப்பது தமிழ் ரசிகர்களுக்கு மற்றொரு பரிசு. இசையை சங்கர்- ஹசான்-லாய் ஆகியோர் கூட்டாக செய்துள்ளனர்.

ஆப்கானையும், தலிபான்களையும் இவ்வளவு நுணுக்கமாக எந்த படத்திலும் பார்த்ததில்லை. நியூயார்க் நகரின் பிரமாண்டம் பிரமிக்க வைக்கிறது. புறா காட்சிகள் விறுவிறுப்பு. கமல் ஆக்ஷன், ஸ்டைலில் கலக்குகிறார். ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் காட்சிகளை நிஜப்படுத்துகிறது.

மொத்தத்தில் ‘விஸ்வரூபம்’ தமிழர்கள் பெருமைப்படும் வகையில், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் சினிமா....

 நன்றி மாலைமலர் 





புதன், 6 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்

 
கமல் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் பல தடைகளை சந்தித்து நாளை (7-ந்தேதி) ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

விஜய்யின் துப்பாக்கி படத்துக்குப்பின் மெகாஹிட் படங்கள் வராததால் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னையில் 30 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர். மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவுகள் நேற்று துவங்கின. பல தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. நடிகர், நடிகைகள் ‘விஸ்வரூபம்’ படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். நாளை முதல் காட்சிக்கு அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள்.

வில்லிவாக்கம், மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டரில் 7 திரைகளில் 28 காட்சிகள் திரையிடப்படுகிறது. வடபழனி கமலா தியேட்டர் அசோக்நகர் உதயம் தியேட்டர்களில் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சத்யம் தியேட்டரில் ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவுகள் விறுவிறுப்பாக நடந்தன. ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தியேட்டர்களில் நாளை போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள் பலர் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கு பஸ், வேன், கார்களில் சென்று விஸ்வரூபம் படத்தை பார்த்தனர். இரண்டாவது தடவையாக தமிழகத்திலும் படத்தை பார்க்க அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இதற்கிடையில் படம் ரிலீஸ் விவகாரத்தில் கமல், விநியோகஸ்தர்கள் இடையே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. விஸ்வரூபம் படத்தை அட்வான்ஸ் அடிப்படையில் தியேட்டர்களில் திரையிட கமல் நடவடிக்கை எடுத்து இருந்தார். ஆனால் சில விநியோகஸ்கர்கள் தியேட்டர் அதிபர்களிடம் மினிமம் கியாரண்டி முறையில் தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போட்டு படத்தை திரையிட முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையை குறைத்து காட்ட முடியும் என்றும் இதனால் கமலுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறினார். கமல் அனைத்து தியேட்டர்களுக்கும் பிரதிநிதிகளை அனுப்பி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
நன்றி மாலை மலர் 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் பிப்-7-ந் தேதி ரிலீஸ்



கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் இப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம் அமைப்பினரும் கமலஹாசனும் ‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண அரசு உதவும் என அறிவித்தார்.

இதையடுத்து சென்னை கோட்டையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கோர்ட்டில் போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்போவதாகவும் கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஸ்வரூபம் படத்தை திரையரங்கில் வெளியிடும் தேதியை கமல் இன்று அறிவித்தார். அதன்படி, விஸ்வரூபம் வருகிற 7-ந் தேதி தமிழகத்தில் வெளியாகிறது. இப்படம் வெளியாக உறுதுணையாக இருந்த தமிழக முதலமைச்சருக்கும், முஸ்லீம் சமுதாய மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் கமல் நன்றி தெரிவித்துள்ளார். 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் 'சூப்பர் ஹிட்' -ஐங்கரன்



விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக அப்படத்தை அந்த நாடுகளில் விநியோகம் செய்துள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஸ்வரூபம் மட்டுமே உலக அளவில் தற்போது பெருமளவில் பேசப்பட்டு வரும் ஒரே தமிழ்ப் படமாகும். இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் திரையிடப்பட்டது. 

தற்போது 2வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளுடன் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் இப்படத்துக்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் இப்படம் மொத்தம் 30 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. பல தியேட்டர்களில் தினசரி 9 காட்சிகள் வரை திரையிடுகின்றனர். காரணம், ரசிகர்களின் கூட்டம் மற்றும் கோரிக்கை காரணமாக. கமல்ஹாசன் படம் ஒன்று இங்கிலாந்தில் இந்த அளவுக்கு பிரமாண்ட வரவேற்பைப் பெற்றிருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிச் செய்தியாகும். ரசிகர்களின் கோரிக்கை காரணமாக இந்த வாரம் கூடுதலாக 8 திரைகள் விஸ்வரூபத்தை திரையிடவுள்ளன. 

 ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் வெற்றிகரமாக முடிந்தது



ஹிந்தியில் வெளியாகியுள்ள கமலின் விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் முடிந்து ரசிகர்கள் வெளியே வந்து விட்டனர். டில்லியில் மட்டும் படம் 20 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தன.
 
ரசிகர்கள் மனநிலை எப்படி உள்ளது என தியேட்டர் வாசலில் அசெஸ்மென்ட் செய்து வெளியிட்டுள்ள CNN-IBN, “ரசிகர்கள் புன்னகையுடன் வெளியே வந்தார்கள். படத்தில் இஸ்லாத்துக்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ காட்சிகள் ஏதுமில்லை. படம் சூப்பராக உள்ளது” என்று கூறியுள்ளது.
இந்த படம் தேசிய விருதுகளை நிச்சயம் வெல்லும். இந்திய திரையுலகையே விஸ்வரூபம் அசைத்துக் காட்டும்” என்ற காமென்ட்டையும் CNN-IBN வெளியிட்டுள்ளது.

“படத்தில் இஸ்லாத்துக்கு எதிரான காட்சிகள் இருந்தால் தடைசெய்யப்படும்” என அறிவிக்கப்பட்ட உத்திரபிரதேசத்திலும், முதலாவது காட்சி எந்தவிட இடையூறும் இன்றி ஓடி முடிந்துள்ளது.
டில்லி தியேட்டர்களுக்கு முன் பெரியளவில் விளம்பரங்கள் ஏதுமில்லை. தியேட்டர் இணைத்தளத்தில்தான் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பு இருந்தது. ஆனால், முதல்நாள் ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவில் உள்ளதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

படத்துக்கு தடை என வெளியான செய்திகள், அட்டகாசமான விளம்பரத்தை கொடுத்துள்ளன. தமிழகத்துக்கு வெளியே விஸ்வரூபம், எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை பெறும் என்கிறார்கள்.

 நன்றி விறுவிறுப்பு 

புதன், 30 ஜனவரி, 2013

அரசியல் சூழ்ச்சி இது - கமல்ஹாசன்



“இன்று விஸ்வரூபம் படத்தின் தடை விலக்கப்படாவிட்டால், இந்த வீட்டையும் நான் இழக்க நேரிடும். நான் எனது சகல சொத்துக்களையும் இழப்பேன். தமிழகத்தை விட்டு வெளியேறுவேன். வேறு ஒரு மாநிலத்தில் வாழ்வதற்கு உகந்த இடம் தேடுவேன். அதுவும் கிடைக்கவில்லை என்றால் வெளிநாடு செல்வேன்” என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

நான் தமிழகத்தில் வாழ்வது பற்றி இன்று மதியம் தெரிந்துவிடும்.
இங்கு நடப்பவை அனைத்துக்கும் யார் காரணம் என்று என்னைக் கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியும். யார் காரணம் என்று உங்களுக்கே தெரியும். அரசியல் சூழ்ச்சி ஒன்றில் நான் சிக்கியிருப்பதாக நினைக்கிறேன்.
ஏன் தமிழகத்தை விட்டு வெளியேற நினைக்கிறேன் என்று கேட்கிறீர்களா? நானல்ல, நான் வெளியேற வேண்டும் என்று ‘தமிழகம்’ நினைக்கிறது!” என்றார் அவர்.

கமல் ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்றே தெரிகிறது. “என்னை வீழ்த்தலாம் என்று நினைக்காதீர்கள். வீழ்ந்தாலும், விதையாக வீழ்வேன். வளர்வேன். லட்சக்கணக்கான பறவைகள் வந்து அமரும் மரமாக மாறுவேன்” என்பது, கமல் ஒரு ‘முடிவு’ எடுத்திருப்பதை காட்டுகிறது.

நன்றி : விறுவிறுப்பு 

உண்மையாகவே வேதனையாக இருக்கின்றது. தமிழனுக்கு தமிழ் நாட்டில் இந்த நிலையா........... இதையெல்லாம் பார்க்கும் போது இது கமலுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை இல்லை  ஜே யின் தலையீட்டால்  உள்ள பிரச்சினை என்பது தெளிவு. அனால் தமிழர்கள்  நினைத்தாள் எதையும் சாதிக்கலாம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அமெரிக்காவில் விஸ்வரூப வசூல்



விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடையைச் சந்தித்து, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் தடையைச் சந்தித்த போதிலும், வெளிநாடுகள் சிலவற்றில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை, கிளம்பிய எதிர்ப்பு ஆகியவற்றால் கவரப்பட்ட ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தைக் காண அரங்குகளில் குவிந்து வருகின்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், சராசரி ஆங்கிலப் படங்களின் முதல்வார வசூல் சாதனையை விஸவரூபம் அமெரிக்காவில் முறியடித்துள்ளதாம்.


பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக தற்போதும் லண்டனில் விஸ்வரூபம் திரைப்படம் ஓடுகிறது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்படாமல் இருந்தால் விஸ்வரூபம் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

‘யுஎஸ் பாக் ஆபிசை’ப் பொறுத்த வரையில் படம் வெளியான சென்ற வார இறுதியில் 6,34,912 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 43 லட்ச ரூபாய். இது சென்ற வாரத்திய அதாவது மூன்று நாள் நிலவரம் மட்டுமே.

சனி, 26 ஜனவரி, 2013

“விஸ்வரூபம் விஷயத்தில் ஏன் பதுங்குகிறீர்கள் சக கலைஞர்களே?” பாரதிராஜா கேள்வி!


“தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று ஆச்சரியப்பட்டுள்ளார், இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநர் பாரதி ராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு கலைஞன் என்பவன் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சுறுதியோடு, பாரதியைப் போல சமூக விழிப்புணர்வுக்காக போராடுபவன். எழுத்தாளராகட்டும், கவிஞராகட்டும், திரைப்பட கலைஞனாகட்டும், எந்த துறையின் விமர்சகனுமாகட்டும், ஒரு படைப்பாளியாக துணிச்சலுடன் தன் கருத்தை பதிவு செய்பவனாக இருக்கவேண்டும். அதுதான் அவன் பொது வாழ்வின் சமூகக் கடமை.
பயந்து ஒளிபவன் படைப்பாளியாக, எழுத்தாளனாக, கலைஞனாக இருக்க முடியாது.
ஆனால் தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா?
திரையுலகில் இத்தனை அமைப்புகள் இருந்தும், அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பதாலோ, அல்லது தனிப்பட்ட மன மாச்சரியங்களாலோ யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இன்று கமல்ஹாசனுக்குத்தானே தலைவலி, வயிற்று வலி என்று நினைத்தால், நாளை நம்மில் ஒருவருக்கு இதே நிலை வரும் போது நிவாரணத்துக்கு யாரைத் தேடுவீர்கள்? எங்கே போவீர்கள்?
நமக்குள் ஒற்றுமை இல்லை.
கமல் என்ற தமிழ்க் கலைஞன் வியாபாரத்திற்காக தன்னை ஒரு போதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன், மூட நம்பிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் திரையுலகில் மீசை வைக்காத பாரதியார். அவன் இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று படம் எடுப்பானா?
ஒரு முஸ்லீம் அங்கத்தினர் உட்பட தணிக்கைக் குழு அங்கீகரித்த ஒரு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால், இந்த அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை. இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண, குடிமகனை கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.
ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை, தமிழ்த் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.
என் இனிய தமிழ் மக்களே, நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள், சிந்தித்துப் பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி VIRUVIRUPPU

வெள்ளி, 25 ஜனவரி, 2013

வி‌ஸ்வரூப‌ம் டி‌க்கெ‌ட் கட்டண‌‌த்தை கொடு‌க்‌கிறது ‌தியே‌ட்ட‌ர்க‌ள்


வி‌ஸ்வரூப‌ம் பட‌த்த‌ை ‌‌ரி‌லீ‌ஸ் செ‌ய்ய 15 நா‌ட்க‌ள் தடை ‌வி‌தி‌த்து த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டது. இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து ர‌ா‌ஜ் க‌ம‌ல் ‌நிறுவன‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்‌கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், 26ஆ‌‌ம் தே‌தி அதாவது இ‌ன்று, பட‌த்தை பா‌ர்‌த்து 28ஆ‌ம் தே‌தி ‌தீ‌ர்‌‌ப்பு அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌த்தது. ஏ‌ற்கனவே ‌வி‌ஸ்வரூப‌ம் 25.01.2013 இ‌ன்று வெ‌ளியாகு‌ம் எ‌ன்று ‌விள‌ம்பர‌ங்க‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, ர‌சிக‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ஏராளமானவ‌ர்க‌ள் ‌தியே‌ட்ட‌ர்க‌ளி‌ல் நே‌ரிடையாகவு‌ம், இணையதள‌ம் மூலமாகவு‌ம் டி‌க்கெ‌ட் வா‌ங்‌கின‌ர். இ‌ந்த‌ நிலை‌யி‌ல் த‌மிழக அர‌சி‌ன் ‌திடீ‌ர் தடையா‌ல், ‌வி‌ஸ்வரூப‌ம் வெ‌ளியாகு‌ம் ‌தியே‌ட்ட‌ர் உ‌ரிமையாள‌ர்க‌ள், டி‌க்கெ‌ட் வா‌ங்‌கியவ‌ர்களு‌க்கு பண‌த்தை இ‌ன்று முத‌ல் ‌திரு‌ம்ப கொடு‌க்‌கிறது.

செ‌ன்னை, சேல‌ம் உ‌ள்பட ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று காலை 11 ம‌ணி‌‌க்கு கவு‌ண்ட‌ர்க‌ளி‌ல் டி‌க்கெ‌ட்டு‌க்கான பண‌த்தை ‌திரு‌ம்ப பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று ‌தியே‌ட்ட‌ர் உ‌ரிமையாள‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வியாழன், 24 ஜனவரி, 2013

கமலுக்கு பெருகும் ஆதரவு

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசு அந்தப் படத்தையே தடை செய்துள்ளது. 
இது கமலுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமலுக்கு ஆதரவான சூழல் திரும்பியுள்ளது. திரையுலகினர் இந்தத் தடை குறித்து வெளிப்படையாக வாய் திறக்காத சூழலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது. 
 கமலை ஆதரிக்கக் கோரி பலரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐ சப்போர்ட் கமல் எனும் வாசகங்களுடன் சமூகத் தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டிடிஎச், திரையரங்க உரிமையாளர்கள் விவகாரத்தின்போது அமைதி காத்த சினிமாக்காரர்கள், இப்போது கமலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுக்க வேண்டியது அவசியம் என பேச ஆரம்பித்துள்ளனர். 
இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் - கம் - இயக்குநர், "நிச்சயம் கமல் பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு இதற்கு மேல் சிக்கல் இருக்க முடியாது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்தை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு திரையுலகினர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமலிருக்கக் காரணம் இதுதான்.
 ஆனால் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் இதுபோன்ற தடைகளை திரையுலகினர் இப்போது எதிர்க்காவிட்டால், சினிமாவில் புதிய முயற்சி என்பதே அருகிவிடும்," என்றார் (தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்).
 நன்றி ONE INDIA

இந்த பிரச்சினை குறித்து ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் ஒன்றிணைந்து செயற்படும்போது தமிழக சினிமாவும் தமிழர்களும் மௌனமாக இருப்பது வேதனையளிக்கின்றது. ஏன் தமிழர்களிடம் இந்த ஒட்ற்றுமை இல்லை .