புதன், 6 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்

 
கமல் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் பல தடைகளை சந்தித்து நாளை (7-ந்தேதி) ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

விஜய்யின் துப்பாக்கி படத்துக்குப்பின் மெகாஹிட் படங்கள் வராததால் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னையில் 30 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர். மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவுகள் நேற்று துவங்கின. பல தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. நடிகர், நடிகைகள் ‘விஸ்வரூபம்’ படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். நாளை முதல் காட்சிக்கு அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள்.

வில்லிவாக்கம், மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டரில் 7 திரைகளில் 28 காட்சிகள் திரையிடப்படுகிறது. வடபழனி கமலா தியேட்டர் அசோக்நகர் உதயம் தியேட்டர்களில் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சத்யம் தியேட்டரில் ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவுகள் விறுவிறுப்பாக நடந்தன. ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தியேட்டர்களில் நாளை போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள் பலர் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கு பஸ், வேன், கார்களில் சென்று விஸ்வரூபம் படத்தை பார்த்தனர். இரண்டாவது தடவையாக தமிழகத்திலும் படத்தை பார்க்க அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இதற்கிடையில் படம் ரிலீஸ் விவகாரத்தில் கமல், விநியோகஸ்தர்கள் இடையே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. விஸ்வரூபம் படத்தை அட்வான்ஸ் அடிப்படையில் தியேட்டர்களில் திரையிட கமல் நடவடிக்கை எடுத்து இருந்தார். ஆனால் சில விநியோகஸ்கர்கள் தியேட்டர் அதிபர்களிடம் மினிமம் கியாரண்டி முறையில் தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போட்டு படத்தை திரையிட முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையை குறைத்து காட்ட முடியும் என்றும் இதனால் கமலுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறினார். கமல் அனைத்து தியேட்டர்களுக்கும் பிரதிநிதிகளை அனுப்பி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
நன்றி மாலை மலர் 

1 கருத்து:

  1. கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

    அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

    ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
    ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

    தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

    அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்

    பதிலளிநீக்கு