சனி, 23 ஜூன், 2012

இடி அமீன்


ஏற்கனவே சர்வாதிகாரி ஹிட்லர் பற்றி எழுதியிருக்கிறேன். இன்று இடி அமீன் பற்றி எழுதப்போகிறேன். இடி அமீனின் சர்வாதிகாரத்தை பார்கக்கும் போது ஹிட்லர் பரவாயில்லை என்று தோன்றுகிறது. நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவன் ருசித்திருக்கின்றான் என்று இவருடன் நெருங்கிப் பழகிய அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது. இரக்கம் என்ற வார்த்தைக்கும் இவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 
இடி அமீன் உலகின் அதி பயங்கர கொடுங்கோலரின் ஒருவன். அமீன் பிறந்த ஆண்டு சம்பந்தமாக சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924, 1925 இல் அல்லது மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்று தெரிகிறது.


தாயால் வளர்க்கப்பட்ட இவன் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த விவசாயியின் மகன் ஆரம்ப கல்வி மட்டுமே பயின்ற இவன்  1946 இல்  சமையல் காரனாக ரானுவத்தில் சேர்ந்து  பின்னர் படிப்படியாக லெப்டினன்ட் ஆக பதவி பெற்றான்.
 
உகண்டா நாடு மற்றும் அரசியல் பற்றி பார்தத்தால், ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa) என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்நாடு ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது. 1962 இல் உகண்டா ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுகந்திரம் பெற்றது. அதே ஆண்டு நடந்த பொது தேர்தலில் வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே வெற்றி பெற்று பிரதமரானார்.  இவர் ஒபோடே லாங்கி பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். இவர் ஆட்சிக்கு வரும் போது அந்நாட்டு மக்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக பிரிந்து வாழ்ந்தனர். அவ்வினங்களுக்கென்று தனி தலைவர்களும் இருந்தனர் ஜாதி தலைவர்கள் போன்று. இந்நிலையில் புகாண்டா என்னும்  பழங்குடியின் தலைவரான கிங் பிரெடி என்பவரை உகாண்டாவுக்கு ஜனாதிபதியாக்கினார்.

ஒபோடே மற்றும் பிரெடி இருவருக்குமான நட்பு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இருவருக்கும் கருத்து முரன்பாடுகள் ஏற்பட ஒபோடே ஜனாதிபதி அதிகாரங்ளை பிரெடியிடமிருந்து பறிக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த புகண்டா இனத்தவர்கள் களவரதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதிகமாக வாழ்ந்த அவ்வின மக்களை அடக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட முரட்டுத்தனமான இராணுவ அதிகாரியே இடி அமீன். காக்வா இனத்தைச் சேர்ந்த இவன் பார்ப்பதற்கே பங்கரமாக இருப்பான் ஆறு அடிக்கு மேல் உயரம். குத்துச்சண்டை சாம்பியன் முரட்டு குணம் கொண்டவன்.
1966 இல் இடி அமின் மேஜர் ஜெனரல் ஆக ஒபோடே அசால் நியமிக்கப்பட்டான் அமீன் முதல் வேலையாக ஜனாதிபதி மாளிகையை பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தினான். இதனால் பீதியடைந்த ஜனாதிபதி நாட்டை வீட்டே பிரிட்டனுக்கு ஓடினார். பின்னர் ஒபோடேவுடன் சேர்ந்து உகண்டாவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லத் தொடங்கினான். இதற்கிடையே பிரிட்டனில் தஞ்சம் புகுந்த  ஜனாதிபதி நோயுற்று இறந்து போனார்.
ஜனவரி 1971 அன்று ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்தார். அவரிடம் பணிவோடு கைகுலுக்கி வழியனுப்பிய இடிஅமின், விமானம் கிளம்பியவுடன் ராணுவத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றி தான் நாட்டின் சர்வாதிகாரி என அறிவித்தான்.  சர்வாதிகாரியான அமீன் வெள்ளையர்களை தனது பல்லாக்கு சுமக்கும்  சிப்பந்திகளாகவும் குடை பிடிக்கவும் பயன்படுத்தி கொண்டதால் நாட்டு மக்களிடையே அமீனுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. 


ஆனால் அமீனுக்கு ஒரு பயம் இருந்தது. தான் இரானுவ அதிகாரியாக இருந்து ஆட்சியை கவிழ்த்து போல் தனக்கும் இது போல நடந்து விட்டால் என்னவாகும் என்று யோசித்த அமீன் அந்நாட்டின் முக்கிய உயர் இரானுவ அதிகாரிகளை இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்தான் இவ்விருந்தில் 36 பேர்வரை கலந்து கொண்டனர். அணைவரையும் திட்டமிட்டது போல் தனது அடியாட்களை வைத்து கொலை செய்தான். மறு நாள் தன்னை கொலை செய்ய சதி திட்டத்துடன் வந்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி ஏற்பட்டது என்று வானொலி மூலம் அறிக்கை விடுத்தான். 

நீதி கெட்டு வந்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சுலைமான் ஹுசைன் அவர்களையும் கொலை செய்து அவரது தலையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து உள்நாட்டு, அயல் நாட்டு பிரமுகர்களை அழைத்த விருந்தொன்றில் சுலைமானின் தலையை எடுத்து ஊறுகாயுடன் சேர்த்து ருசித்ததாகவும் தகவலொன்று கூறுகின்றது.

எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீனுக்கு நாட்டின் தலை எழுத்து தனது கையில் இருந்ததால்,  நாட்டின் உயரிய  பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது  மார்பே மறைக்கும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டான்.


இவன் செய்த கொலைகளும் தேசதுரோக செயல்களும் மக்களுக்கு தெரியாமல் போனமைக்கான முக்கிய காரணம் அந்த நேரத்தில் ஊடகங்கள் அதிகளவில் இல்லாமையே, இருந்த வானொலியும் அமீனின் கையில் என்பதால் உண்மைகள் மறைக்கப்ட்டன. ஆனாலும் உண்மைகள் கசிய ஆரம்பித்தது அதன் பிறது அமெரிக்க பத்திரிக்கை ஒன்றின் நிருபரான நிகோலஸ் ஸ்ட்ரோ என்பவரும் ராபர்ட் ஸைடில் என்கிற சமூகவியல் பேராசிரியரும் உகாண்டாவில் ராணுவ  கமாண்டரான மேஜர் ஜூமோ அய்கா என்பவனை சந்தித்து, இதுபற்றி விசாரிக்க போன போது அவர்களையும் அமீனின் ஆணைப்படி கொலை செய்தான் அய்கா. அத்தோடு உகண்டாவின் பொருளாதாரமும் மந்தகதியாகி அடிமட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. உதவி செய்யவும் எந்த நாடும் முன்வரவில்லை.

உகாண்டாவில் 50,000 க்கும் அதிகமாக ஆசிய மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் தொழிலதிபர்களாகவும் உயரிய பதவிகனையும் வகித்து, உகாண்டாவின் பொருளாதாரத்தையும் தூக்கி பிடித்து நிறுத்தினார்கள். ஆசிய தொழிலதிபர்களால் லட்சக்கணக்கான உகாண்டா மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது. இவர்கள் அணைவரையும் 90 நாட்களில் தனது நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டான்.  பல தலைமுறைகளாக உகாண்டாவிலேயே பிறந்து, வளர்ந்த அணைவரும் கையில் மூட்டை முடிச்சிகளுடன்  நாட்டைவிட்டு வெளியேறின.
உகாண்டா அரசுக்கு லிபியா நாடு மட்டுமே எதோ நிதியுதவி அளித்து வந்தது. லிபியாவின் ஒரே கண்டிஷன் - யூதர்கள் அத்தனை பேரையும் நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பதே அந்த கண்டிஷன். 1976 ஜூன் 28 ஆம் திகதி இஸ்ரேலிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை பாலஸ்தினிய தீவிரவாதிகள் கடத்தி, உகாண்டாவில் இறங்கினார்கள். விமானத்தில் அதிகமான யூதர்கள்.

ஜூலை 3 ஆம் தேதி நள்ளிரவு இஸ்ரேலிய கமாண்டோக்களைச் சுமந்துக்கொண்டு ஒரு ராணுவ விமானம் வந்து  இறங்கியது. விமானத்திலிருந்து பாய்ந்த கமாண்டோக்கள் விமான நிலையத்தில் புகுந்து, அத்தனை பயணிகளையும் காப்பாற்றி, தங்கள் விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள் குறுக்கே வந்த அமீனின்  ராணுவ வீரர்கள் அணைவரையும் சுட்டுத்தள்ளினார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.
1978 இல் உள்நாட்டு கலகங்களும் பொருளாதார பிரச்சனைகளும் உகண்டாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது அதனை மூடி மறைக்க அண்டை நாடான தான்சானியாவை போருக்கு அழைத்தான். ஆத்திரமடைந்த தான்சானியா மற்றும் உள்நாட்டு படைகள் எதிர்த்து தாக்கின பயிற்சியில்லாத அமீனின் இராணுவ வீரர்கள் சமாளிக்க முடியாமல் இறந்து போனார்கள்.
இடி அமின் லிபியாவில் தஞ்சம் புகுந்தான் பின்னர் அங்கேயும் எதிர்ப்பு அதிகரிக்கவே சில காலம் ஈராக்கில் வாழ்ந்தான் அவனுக்கு ஏறக்குறைய 40 பிள்ளைகளும் 8 மனைவிக்கு மேல் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இறுதிக்காலகட்டத்தில் 16 ஆகஸ்ட் 2003 அன்று மாரடைப்பால் இறந்து போனான். இடி அமின் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டான். மீண்டும் ஒபோடே ஆட்சி துவங்கியது.
அமீனின் ஆட்சியில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.

மனிதனாக பிறந்து மிருகமாக வாழ்ந்து மிருகமாகவே இறந்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக