புதன், 20 ஜூன், 2012

கார்ல் மார்க்ஸ்


காலம் எப்படி கி.மு- கி.பி என்று பிரிக்கப்படுகின்றதோ அதே போல் மனித வரலாற்றையும் மா.மு - மா.பி என்று பிரிக்கும் அனவிற்கு அவருடைய சிந்தனைகளும் கோட்பாடுகளும் அமைந்திருக்கின்றது.  

"உலகத் தொழிலளர்க்ளே ஒன்று படுங்கள் உங்க்களிடம் இழப்பத்ற்கு ஒன்றும் இல்லை பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது" என்ற துவக்கத்துடன் தன்னுடைய பொதுவுடமை அறிக்கையை வெளியிட்டவர் கார்ல் மார்க்ஸ். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக பொதுவுடமையின் முக்கிய மூலவேராக இருந்தவர் கார்ல் மார்கஸ் .உலகின் மக்கள் தொகையின் பெரும் பகுதி மக்களின் தலை விதியை உன்னதமான முறையில் மாற்றி அமைத்தவர் . அவருடைய கொள்கையை உலக மக்கள் தொகையில் அதிகமானவர்கள் (சராசரியாக 130 கோடி என்று தெரிகிறது) பின்பற்றுகிறார்கள். வேறு எந்த கொள்கைகளையும் இவ்வளவு பேர் பினபற்றவில்லை.


கார்ல் மார்க்ஸ் உருவாக்க  முயன்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு 1889  ஜூலை 14 அன்று பரிசில் (ஃபிரான்ஸ்) நடைபெற்றது. பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கார்ல் மார்க்ஸ் சொன்ன எந்த தொழிலாளர் ஆகினும் 8 மணிநேர உழைப்பு என்ற கொள்கையை உலகமயமாக்குவதாக தீர்மானிக்கப்பட்டது அதே கூட்டத்தில் மே முதல் திகதியை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் தத்தமது இயக்கங்களை நடத்திட, கொண்டாட ஒரு தினமாக தெரிவு செய்தார்கள்.அதுதான் மே தினம் 


கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx) பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ள ரைன்  நதிக்கரையின் அருகில் இருக்ம் ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதியில் உள்ள வீட்டில் 05-05-1818 ம் ஆண்டு பிறந்தார். தாய் ஹென்ரிட்டா, தந்தை ஹெர்ஷல் மார்க்ஸ் சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர். உடன் பிறந்தவர்கள் 8 பேர். மார்க்ஸ் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஜெர்மனியில்தான் (சொந்த நாடு பிரெஞ்சு) 12 வயதில் படிக்க ஆரம்பித்த இவர்  பான் பல்கலைக்கழகத்தில் வக்கில் படிப்பை (தந்தையின் விருப்பத்திற்காக) 25-08-1835 தந்தையால் முடித்துக்கொண்டார்.

கார்ல் மார்கஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவர்களுள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார்.

ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜென்னியின் (காதலி) தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது. ஜென்னி எனும் மிக அழகான படித்த பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையை முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணினார். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம். 

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

இதற்கிடையில் தனது காதலியான ஜென்னியை  1843ம் ஆண்டு ஜூன் 19ம் நாள் மணம் செய்து கொண்டார். ஜெனியை 17  ஆவது வயதில் காதலிக்க தொடங்கி 29 ஆவது வயதில் திருமணம் செய்தார் .

தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”.  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் அக்கட்டுரையின் கருவாக அமைந்தது. பிறகு ஜெர்மன் அரசால் அப்பத்திரிக்கை தடைசெய்யப்பட்டது. மார்க்சை நாடு கடத்தவும் அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டது. ஆனால் மார்க்ஸ் மன்னிப்பு கேட்டால் ஒரு வாய்ப்பு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியத்தில் குடியேறினார். 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து அந்நாடே பயந்து “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது. 


பிறகு மார்க்ஸ், நெசவுத் தொழில் அதிபரின் மகனான ஏங்கல்ஸ் உடன் சேர்ந்து  “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிராக “பொதுவுடமைச் சங்கம்”. உருவாக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர். இவர்கள் இருவரின் புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்சும் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்த காலத்தில் தனது உடைகளை அடகு வைக்கும் அளவிற்கு வறுமைப்பட்டார். ஒருமுறை வீட்டை விட்டு விரட்டப்பட்டார்.
தனது ஒரே ஒரு மகள் இறந்ததும் தன் நண்பருக்கு மீண்டும் கடிதம் எழுதினர் "இந்நாட்களில் நான் அனுபவித்த மிகையான துன்பங்களுக்கு இடையேயும் உன் நட்பும் நாம் இவ்வுலகத்திற்கு செய்ய வேண்டிய அறிவார்ந்த பணியும் இருக்கிறது என்ற நம்பிக்கையுமே என்னை நிமிர்த்தி வைத்துள்ளது" என்று எழுதினார் நியூ யார்க் டெய்லி பத்திரிக்கைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் ஆனால் போதிய பலனளிக்கவில்லை. தனது மகள் இறந்த  சமயத்தில் ஜெனி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது தொட்டில் இல்லை. இறக்கும் போது சவப்பெட்டி கூட இல்லை”
1881ம் அண்டு,  டிசம்பர் மாதத்தில், மார்க்சின் காதல் மனைவி இறந்தார். ஜெனியின் இழப்பு மார்க்சை பெரிதும் வாட்டியது. இதன்பின்  15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி  1883 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இலண்டனில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி இறந்தார். இறக்கும் போது 61வது வயது. இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) , The philosophers have only interpreted the world in various ways - the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சியினர் மார்க்சின் கல்லறையை அமைத்தனர். 
மார்க்ஸ் எழுதிய மூலதனம் ( DAS KAPITAL) என்ற நூலின் பாதிப்பு இன்றளவும் இருக்கின்றது. அந்நூல் பற்றி குறிப்பிடுவதானால், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வு கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியளாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூலில் கூறப்படுவது  நமக்கு ஒரு பொருள் தேவைப்பட்டால் அதை நாம் உற்பத்தி செய்வதில்லை கஷ்டப்படாமல் பணம் செலுத்தி வாங்கிக்கொள்கிறோம். யாரோ ஒரு தொழிலாளியில் உழைப்பிற்கு பணம் செலுத்துகிறோம். அப்பணத்தின் நியாயமான பகுதி தொழிலாளியை சென்றடைவதில்லை மாறாக உற்பத்தி நிறுவனங்களும் வியாபாரிகளும் உழைக்காமல் பெருலாபம் ஈட்டுகின்றனர். மற்றைய விடயம், போட்டி நிறைந்த வியாபாரத்தில் வியாபார அதிகரிப்பிற்காக பொருளின் விலை குறைக்கப்படுகின்றது. அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க தொழிலாளி அதிகமாக உழைப்புக்குள்ளாக்கி நசுக்கப்படுகின்றான். இதுவே இந்நூலின் கருவாக அமைந்நதது.
மூலதனம்
முதல் பகுதி  1867
இரண்டாம்,முன்றாம் பகுதி அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) இனால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. 
நான்காவது பகுதி Theories of Surplus-Value ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky இனால் தொகுத்து வெளியிடப்பட்டது.

“பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேலான விடயம்”. - கார்ல் மார்க்ஸ்

ஒரு சில தகவல்கள் : விக்கிபீடியா மற்றும் இணையம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக