சனி, 9 ஜூன், 2012

புளுட்டோ


ரோமானியர்களின் கடவுளின் பெயர் சூட்டப் பட்டுள்ள புளுட்டோ 1930-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு வரை மட்டுமே கிரகமாக கணிக்கப்பட்டது. இன்று அது குறுங் கோளாக வரையறுக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து  366 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சற்றி வர 248 ஆண்டுகள் ஆகும்.  புளுட்டோ பெருசிவல் லோவெல் என்பாரால் 1915லேயே கணிக்கப்பட்டு 1930ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சாரோன் என்ற பெரிய நிலவும் இரு சிறிய நிலாக்களும் உள்ளன.

புளுட்டோவுடன் சாரோன் மற்றும் இரு சிறிய நிலவுகள்.


புளூட்டோவின் தோற்றம் பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றது முதலாவது : வியாழனிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு நிலவே புளூட்டோவானது. 
இரண்டாவது : சூரிய மண்டலத்தில் சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் சென்ற விண்கல் ஒன்று இறுதியில் புளூட்டோவாகி சூரியனைச் சுற்றி ஒழுக்கில் வர ஆரம்பித்தது. 


புளுட்டோ ஒரு கோள் அல்ல
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  'செக்' குடியரசின் தலைநகரில் பன்னாட்டு வானவியல் ஒன்றியத்தின் 26 வது பேரவை நடைபெற்றது. இவ் அமர்வில்  2500 வானவியலர்கள் கலந்துகொண்டார்கள். அதில் பல தீர்மானங்கள், அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் முக்கியமானது  இனி புளூட்டோ ஒரு கோள் கிடையாது, அது ஒரு குறுங்கோள் மட்டும என்று ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாகச் அறிவிக்கப்பட்டது. 

புளுட்டோவை ஒரு கோளாக மறுப்பதற்கான காரணங்களாக அமைவது.....
கோள் என்பது எந்த ஓர் இடையூறும் இல்லாத தன் சுற்றுப்பாதைச் சூழலில் அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும், சூரியனைச் ஒரு சுற்றுப் பாதையில் சுற்றிவர வேண்டும், தன் ஈர்ப்பு விசையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தேவையான தன்மையை உடையதும், கோளவடிவிலும் காணப்படுவதே கோள் ஆகும். ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’  நிபந்தனையை புளுட்டோ எட்டாததால், அதை கோள் எனக்கூற முடியாது என்ற முடிவிற்கு சர்வதேச வான இயல் நிபுணர்கள் வந்தார்கள்.

சுருக்கமான தகவல்கள்


சுற்றுப்பாதைப் பண்புகள்
சராசரி ஆரம் 5.91352×109 கி.மீ
வட்டவிலகல் 0.24880766
சுற்றுக்காலம் 248y 197d 5.5h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம் (Synodic Period) 366.7 days
சராசரி சுற்று வேகம் 4.7490 km/s
சாய்வு 17.14175°
துணைக்கோள்களின் எண்ணிக்கை 1


இயல் பண்புகள்
நடுவரைக்கோட்டு விட்டம் 2320 km
புறப் பரப்பளவு 17 million km2
நிறை 1.290×1022 kg
சராசரி அடர்த்தி 2.05 g/cm3
பரப்பு ஈர்ப்பு 0.6 m/s2
சுழற்சிக் காலம் 6d 9h 17.6m
அச்சுச் சாய்வு 119.61°
எதிரொளிப்புத் திறன் (ஆல்பெடோ) 0.30
விலகு வேகம் 1.2 km/s


பரப்பு வெப்பநிலை
min     mean    max
33K     44K     55K


விண்பொருளின் வளிமண்டலம்
வளிமண்டல அழுத்தம் 0 - 0.01 கிலோ பாசுக்கல்
நைட்ரசன் 90%
மீத்தேன் 10%




வெள்ளி, 8 ஜூன், 2012

நெப்டியூன்


நெப்டியூன் (Neptune) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் சூரியக்குடும்பத்தில் இது நான்காவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது. நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 166 வருடங்கள் ஆகின்றன. இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் கடந்த வருடம் தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்தது. அதாவது, சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 164.8 ஆண்டுகளாகும்.

ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருக்கக்கூடும் அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் மாற்றம் ஏற்படுகிறது என கணித்தனர்.

பிரெஞ்சு நாட்டவரான லெவெரியா மற்றும் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஆடம்ஸ் இருவரும் தனித்தனியே யுரேனஸ் மீது தாக்கம் செலுத்தி 8 வது கோளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர். யுரேனஸ் பாதையில் எத்தகைய தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதை வானவியல் ஆய்வுகள் காட்டின. மர்மக் கோள் எங்கு இருந்தால் இதே தடுமாற்றம் ஏற்படும் என்பதை கால்குலஸ் கொண்டு கணக்கிட முனைந்தனர்.

1846ல் ஆடம்ஸ் அவரது நாட்டின் தலை சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது முடிவுகளை எடுத்துச் சென்றார். எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய  ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் திகதி சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர்.
இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன், கடந்த ஆண்டு (2011) ஜூலை 12 ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.அதாவது நெப்டியூனுக்கு ஒரு வருடம் என்பது  164.8 புவி வருடங்கள்        ( கிட்டத்தட்ட 60,150 நாட்கள் ) ஆகும். நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 புவி மணித்தியாலங்கள்.
நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விசேஷமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர்-2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான தகவல்கள்

சுற்று தரவுகள்
சராசரிஆரம் 4,498,252,900 km
வட்டவிலகல் 0.00858587
சுற்றுக்காலம் 164ஆ 288நா 13ம
தன்னைத் தானே - 16 மணி 6.5 நிமிடம்
சராசரி சுற்று வேகம் 5.4778 கிமீ/வி
சாய்வு 1.76917°
 துணைக் கோள்கள் 13

இயற்பியல் தரவுகள்
கோள்நடுக்கோட்டில் விட்டம் 49572 கிமீ
மேற்பரப்பு 7.65×109 கிமீ2
பொருண்மை 1.024×1026 கிலோகிராம்
சராசரி அடர்த்தி 1.64 g/cm3
மேற்புரஈர்ப்பு விசை 11.0 m/s2
சுழற்சிக் காலம் 16ம 6.5நி
அச்சு சாய்வு 29.58°
வெண் எகிர்சிதறல் 0.41
விடுபடு திசைவேகம் 23.71 km/s
மேற்பரப்பு வெப்பம்
குறைந்த   சராசரி    கூடிய
  50K               53K           இல்லை K

வளிமண்டல அமைப்பு
வளிமண்டல அமுக்கம் 100-300 kPa
ஐதரசன் >84%
ஈலியம் >12%
மெதேன் 2%
அமோனியா 0.01%
எதேன் 0.00025%
அசற்றலீன் 0.00001%

செவ்வாய், 5 ஜூன், 2012

யுரேனஸ்

 
பூமியை விட மூன்று மடங்கு பெரிய கனவளவை உடைய யுரேனஸ் சூரிய மண்டலத்தின் ஏழாவது கோளாகவும் விட்டத்தின் அடிப்படையில் மூன்றாவது மிகப் பெரிய கோளாவும் அமைந்துள்ளது. இந்த கிரகம் 1781 ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷெல் என்பவரால் கண்டறியப்பட்டது. இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை. இதுவரை 27 துணைக் கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாதவை பல இருக்கக்கூடும்.
 
பூமியுடன் ஒப்பிடும் போது


வியாழனைப் போன்றே மிகப் பெரிய வாயுக் கோளான யுரனேஸ் இன் வளி மண்டலத்தில் ஐதரசன்,ஹீலியம், மெத்தேன் ஆகிய வாயுக்கள் பெருமளவு காணப்படுகின்றன. யுரேனஸில் வெறும் 2% வீதமே மெத்தேன் வாயு காணப்பட்டாலும் தொலைக் காட்டியால் நோக்கும் போது அதன் மேற்பரப்பு அழகிய நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் தென்படுவதற்கு இவ்வாயு காரணமாகின்றது. இதனைச் சுற்றி 11 வளையங்கள் காணப்படுகின்ற போதிலும் இவ்வளையங்கள் மிக மெல்லியதாக இருப்பதால் ஹபிள் போன்ற வினைத் திறன் மிக்க விண் தொலைக்காட்டிகளால் மட்டுமே இவை அவதானிக்கப் பட முடிவதுடன் வெறும் கண்களுக்கோ சாதாரண தொலைக்காட்டிகளுக்கோ இவை புலப்படுவதில்லை.

இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகிறது. இது தன்னைத் தானே ஒருமுறை சுற்ற 17 மணி 14 நிமிடங்கள் ஆகிறது. . யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

வெள்ளியைப் போன்றே யுரேனஸும் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் போதும் தனது அச்சில் 90 பாகை சாய்வில் ஏறக்குறைய நீள்வட்டப்பாதையில் வலம் வருவதால் அது சூரியனைச் சுற்றி வரும் அதே பக்கத்தில் வடக்கிலிருந்து தெற்காக சுழலுவது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. மேலும் இத்தகைய முரணான தன்மை காரணமாக அங்கு பருவ காலங்கள் 20 வருடங்களுக்கு ஒரு முறையே மாறுகின்றன. யுரேன்ஸின் மேற்பரப்பிலும் வியாழன் மற்றும் சனி கிரகங்களைப் போலவே மிக வேகமாக கிட்டத்தட்ட 900Km/h வேகத்தில் காற்று வீசி வருகின்றது.

சுருக்கமான தகவல்கள்
  • சராசரி ஆரம் 2,870,972,200 km
  • வட்டவிலகல் 0.04716771
  • சுற்றுக்காலம் 84y 3d 15.66h
  • பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
  • (Synodic Period) 369.7 days
  • சராசரிச் சுற்றுவேகம் 6.8352 km/s
  • சாய்வு 0.76986°
  • உபகோள்களின் எண்ணிக்கை 27
  • மையக்கோட்டு விட்டம் 51,118 km
  • மேற்பரப்பளவு 8,130,000,000 km2
  • திணிவு 8.686×1025 kg
  • சராசரி அடர்த்தி 1.29 g/cm3
  • மேற்பரப்பு ஈர்ப்பு 8.69 m/s2
  • சுழற்சிக் காலம் -17h 14m
  • அச்சுச்சாய்வு 97.86°
  • வெண் எகிர்சிதறல் 0.51
  • தப்பும்வேகம் 21.29 km/s
  • ஐதரசன் - 83%
  • ஹீலியம் - 15%
  • மெத்தேன் - 2.3%
  • ஐதரசன் டெயூடெரைட் (HD) - 0.009% 
கடந்த 2006 ஆம் ஆண்டு ஹபிள் தொலைக் காட்டியால் யுரேனஸின் வட துருவத்தில் மிகப் பெரிய கரும் பொட்டு ஒன்றை அவதானித்தது. சுமார் 1700 Km நீளமும் 3000 Km அகலமும் உடைய இந்த கரும் பொட்டு பின்னர் வளிச் சுழல் எனத் தெளிவு படுத்தப் பட்டது.