சனி, 19 மே, 2012

செவ்வாய் (MARS)


செவ்வாய் சூரியனிலிருந்து 4 வது இடத்திலும் பூமிக்கு அடுத்ததாகவும் காணப்படுகின்றது. செவ்வாய், போபோஸ் , டெயிமோஸ் எனும் இரு துணைக் கோள்களைக் கொண்டுள்ளது.  தரையின் சிவப்பு நிறம் காரணமாக Red Planet என அழைக்கப்படும் செவ்வாய், ரோமானியர்களின் யுத்தத்துக்கு உரிய கடவுளான MARS எனும் பெயரை சூடியுள்ளது. ஏனைய கிரகங்ககளிலும் பார்க்க செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. தரைப்பகுதி சிவப்பாகக் காணப்படுவதற்குக் காரணம் அதன் மேற்பரப்பில் உள்ள துரு அல்லது இரும்பு ஒக்ஸைட்டு ஆகும்.

செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. செவ்வாயில் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக காணப்படுகின்றது. துருவப்பகுதிகளில் உள்ள பனி பெரும்பாலும் கார்பனீரொட்சைட்டின் உலர்ந்த வடிவமாகும்.

ஆராய்ச்சியின் அடிப்படையில் விண்கலங்கள், தொலைக்காட்டிகள் மற்றும் செய்ம்மதிகள் மூலம் ஆராயப்பட்ட, ஆராய்ச்சி செய்யப்பட்ட கோள் இதுவேயாகும்.  சாதாரணமாக பார்க்கும் போது சந்திரனுக்கு அண்மையில் பிரகாசமான நட்சத்திரம் போல் காட்சியளிக்கும் செவ்வாய் தொலைக்காட்டியால் தெளிவாக பார்க்க முடியும். அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் செவ்வாய் குறித்து ஆராய்வதற்கு ஆர்வம் காட்டின.


செவ்வாய் பற்றிய சுருக்கமான தகவல்கள்
சராசரி ஆரம் 227,936,640 கிமீ
வட்டவிலகல் 0.09341233
சூரியனை சுற்றும் காலம் 686.98 நாட்கள்
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்  (Synodic Period)  779.95 நாட்கள்
சராசரிச் சுற்று வேகம் (சுற்றுப்பாதையில்) 24.1309 கிமீ/செக்
அச்சின் சாய்வு 1.85061 பாகை
துணைக்கோள்களின் எண்ணிக்கை 2
மையக்கோட்டு விட்டம் 6,794.4 கிமீ
மேற்பரப்பளவு 144 மில்லியன் கிமீ2
திணிவு 6.4191 × 1023 கிகி 
சராசரி அடர்த்தி 3.94 கிராம்/செமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 3.71 மீ/செக்2
சுழற்சிக் காலம் 24.6229 மணி
அச்சுச் சரிவு 25.19 பாகை
தப்பும் வேகம் 5.02 கிமீ/செக்
மேற்பரப்பு வெப்பநிலை குறுகியது 133K மத்திய 210K அதிக 293K

வளிமண்டல இயல்புகள்
கரியமில வாயு 95.32%
நைதரசன் 2.7%
ஆர்கன் 1.6%
ஆக்ஸிஜன் 0.13%
கார்பன் மோனாக்சைடு 0.07%
நீராவி 0.03%

நாசாவின்  ஸ்பிரிட் மற்றும் ரோவர் என்பன செவ்வாயின் தரையில் இறங்கி அதன் மேற்பரப்பின் இயல்புகளை ஆராய்ந்தன. இவை ஆரம்பத்தில் ஒழுங்காக இயங்கிய போதும் சில மாதங்கள் கழித்து இவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து நாசாவால் செலுத்தப்பட்ட மார்ஸ் குளோபல் செர்வெயோர் எனும் செய்மதி செவ்வாயின் தென் துருவத்தை ஆராய்ந்து அங்கு பனிப் பாறைகள் விலகுவதைக் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கிரகம் இத்தனை தீவிரமாக விஞ்ஞானிகளால் ஆராயப்படுவதற்குக் காரணம் அங்கு உறை நிலையிலோ வாயு நிலையிலோ நீர் காணப்படுமிடத்து வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்பதாகும்.