வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் வெற்றிகரமாக முடிந்தது



ஹிந்தியில் வெளியாகியுள்ள கமலின் விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் முடிந்து ரசிகர்கள் வெளியே வந்து விட்டனர். டில்லியில் மட்டும் படம் 20 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தன.
 
ரசிகர்கள் மனநிலை எப்படி உள்ளது என தியேட்டர் வாசலில் அசெஸ்மென்ட் செய்து வெளியிட்டுள்ள CNN-IBN, “ரசிகர்கள் புன்னகையுடன் வெளியே வந்தார்கள். படத்தில் இஸ்லாத்துக்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ காட்சிகள் ஏதுமில்லை. படம் சூப்பராக உள்ளது” என்று கூறியுள்ளது.
இந்த படம் தேசிய விருதுகளை நிச்சயம் வெல்லும். இந்திய திரையுலகையே விஸ்வரூபம் அசைத்துக் காட்டும்” என்ற காமென்ட்டையும் CNN-IBN வெளியிட்டுள்ளது.

“படத்தில் இஸ்லாத்துக்கு எதிரான காட்சிகள் இருந்தால் தடைசெய்யப்படும்” என அறிவிக்கப்பட்ட உத்திரபிரதேசத்திலும், முதலாவது காட்சி எந்தவிட இடையூறும் இன்றி ஓடி முடிந்துள்ளது.
டில்லி தியேட்டர்களுக்கு முன் பெரியளவில் விளம்பரங்கள் ஏதுமில்லை. தியேட்டர் இணைத்தளத்தில்தான் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பு இருந்தது. ஆனால், முதல்நாள் ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவில் உள்ளதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

படத்துக்கு தடை என வெளியான செய்திகள், அட்டகாசமான விளம்பரத்தை கொடுத்துள்ளன. தமிழகத்துக்கு வெளியே விஸ்வரூபம், எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை பெறும் என்கிறார்கள்.

 நன்றி விறுவிறுப்பு 

புதன், 30 ஜனவரி, 2013

அரசியல் சூழ்ச்சி இது - கமல்ஹாசன்



“இன்று விஸ்வரூபம் படத்தின் தடை விலக்கப்படாவிட்டால், இந்த வீட்டையும் நான் இழக்க நேரிடும். நான் எனது சகல சொத்துக்களையும் இழப்பேன். தமிழகத்தை விட்டு வெளியேறுவேன். வேறு ஒரு மாநிலத்தில் வாழ்வதற்கு உகந்த இடம் தேடுவேன். அதுவும் கிடைக்கவில்லை என்றால் வெளிநாடு செல்வேன்” என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

நான் தமிழகத்தில் வாழ்வது பற்றி இன்று மதியம் தெரிந்துவிடும்.
இங்கு நடப்பவை அனைத்துக்கும் யார் காரணம் என்று என்னைக் கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியும். யார் காரணம் என்று உங்களுக்கே தெரியும். அரசியல் சூழ்ச்சி ஒன்றில் நான் சிக்கியிருப்பதாக நினைக்கிறேன்.
ஏன் தமிழகத்தை விட்டு வெளியேற நினைக்கிறேன் என்று கேட்கிறீர்களா? நானல்ல, நான் வெளியேற வேண்டும் என்று ‘தமிழகம்’ நினைக்கிறது!” என்றார் அவர்.

கமல் ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்றே தெரிகிறது. “என்னை வீழ்த்தலாம் என்று நினைக்காதீர்கள். வீழ்ந்தாலும், விதையாக வீழ்வேன். வளர்வேன். லட்சக்கணக்கான பறவைகள் வந்து அமரும் மரமாக மாறுவேன்” என்பது, கமல் ஒரு ‘முடிவு’ எடுத்திருப்பதை காட்டுகிறது.

நன்றி : விறுவிறுப்பு 

உண்மையாகவே வேதனையாக இருக்கின்றது. தமிழனுக்கு தமிழ் நாட்டில் இந்த நிலையா........... இதையெல்லாம் பார்க்கும் போது இது கமலுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை இல்லை  ஜே யின் தலையீட்டால்  உள்ள பிரச்சினை என்பது தெளிவு. அனால் தமிழர்கள்  நினைத்தாள் எதையும் சாதிக்கலாம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அமெரிக்காவில் விஸ்வரூப வசூல்



விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடையைச் சந்தித்து, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் தடையைச் சந்தித்த போதிலும், வெளிநாடுகள் சிலவற்றில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை, கிளம்பிய எதிர்ப்பு ஆகியவற்றால் கவரப்பட்ட ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தைக் காண அரங்குகளில் குவிந்து வருகின்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், சராசரி ஆங்கிலப் படங்களின் முதல்வார வசூல் சாதனையை விஸவரூபம் அமெரிக்காவில் முறியடித்துள்ளதாம்.


பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக தற்போதும் லண்டனில் விஸ்வரூபம் திரைப்படம் ஓடுகிறது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்படாமல் இருந்தால் விஸ்வரூபம் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

‘யுஎஸ் பாக் ஆபிசை’ப் பொறுத்த வரையில் படம் வெளியான சென்ற வார இறுதியில் 6,34,912 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 43 லட்ச ரூபாய். இது சென்ற வாரத்திய அதாவது மூன்று நாள் நிலவரம் மட்டுமே.