வியாழன், 24 ஜனவரி, 2013

கமலுக்கு பெருகும் ஆதரவு

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசு அந்தப் படத்தையே தடை செய்துள்ளது. 
இது கமலுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமலுக்கு ஆதரவான சூழல் திரும்பியுள்ளது. திரையுலகினர் இந்தத் தடை குறித்து வெளிப்படையாக வாய் திறக்காத சூழலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது. 
 கமலை ஆதரிக்கக் கோரி பலரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐ சப்போர்ட் கமல் எனும் வாசகங்களுடன் சமூகத் தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டிடிஎச், திரையரங்க உரிமையாளர்கள் விவகாரத்தின்போது அமைதி காத்த சினிமாக்காரர்கள், இப்போது கமலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுக்க வேண்டியது அவசியம் என பேச ஆரம்பித்துள்ளனர். 
இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் - கம் - இயக்குநர், "நிச்சயம் கமல் பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு இதற்கு மேல் சிக்கல் இருக்க முடியாது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்தை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு திரையுலகினர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமலிருக்கக் காரணம் இதுதான்.
 ஆனால் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் இதுபோன்ற தடைகளை திரையுலகினர் இப்போது எதிர்க்காவிட்டால், சினிமாவில் புதிய முயற்சி என்பதே அருகிவிடும்," என்றார் (தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்).
 நன்றி ONE INDIA

இந்த பிரச்சினை குறித்து ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் ஒன்றிணைந்து செயற்படும்போது தமிழக சினிமாவும் தமிழர்களும் மௌனமாக இருப்பது வேதனையளிக்கின்றது. ஏன் தமிழர்களிடம் இந்த ஒட்ற்றுமை இல்லை .



4 கருத்துகள்:

  1. ஏன்? இசுலாமியத்தை விமரிசிக்காமல் படங்களே எடுக்க முடியாதா? இந்த கதையில்தான் எடுக்க வேண்டுமா? இதற்கு முன்னர் வந்த தசாவதாரம் படத்திலும் இப்படித்தான் ஒரு அரசரை கொடூரமானவர் என்ற முறையில் சித்தரித்துக் காட்டினார்.

    ஈ, குரங்கு, யானை கூட நடிச்சிடுச்சு. எந்த இடத்திலும் ஆபாசம், வன்முறை மற்றும் சாதி, மதங்கள் இல்லையே அவற்றில்..ஒரு விஷயத்தை எடுக்கும் போது அதில் பிரச்சினைகள் வரும் என்று தெரிந்தும் அந்த படத்தை, அந்த கதையை தேர்ந்தெடுப்பது ஏன்? இதை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் எதிர்க்கும் என்று தெரிந்தும் அதனை வெளியிட துடிப்பது, எதை காட்டுகின்றது என்று புரியவில்லை....

    பதிலளிநீக்கு
  2. சுட்ட விமர்சனம்
    http://sekkaali.blogspot.com/2013/01/blog-post_24.html

    பதிலளிநீக்கு