வியாழன், 13 டிசம்பர், 2012

ஏர்டெல் டி.டி.எச் இல் விஸ்வரூபம்

எதிர்வரும் ஜனவரி 11-ந்தேதி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருகிறது. இதை தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ஏர்டெல் டி.டி.எச்-ல் காண முடியும் என கமல்ஹாசன் தரப்பு தெரிவித்துள்ளது.

கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' தியேட்டர்களில் வெளியிடப்படும் அதே நாள் டி.டி.எச் இலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படிச் செய்வதின் நோக்கம் திருட்டு  டிவிடி ஐ ஒழிப்பதுதான் என கமல்ஹாசன் கூறினார்.
இதனை தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்கை, ஏர்டெல், ரிலையன்ஸ், வீடியோகான் உள்பட பிரபலாமன டி.டி.எச் நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டின. இதனால் கடும் போட்டி நிலவியது.
இறுதியாக டி.டி.எச். ஒளிபரப்பு உரிமையை ஏர்டெல் நிறுவனம் வாங்கியது. எனவே வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச். வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.வி.க்களில் கண்டு களிக்கலாம்.
ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.
சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் படமானது உள்நாட்டு டி.டி.எச். நிறுவனங்களைத் தவிர மலேசியாவின் ஆஸ்ட்ரோ, சிங்கப்பூரின் பிரபல சிஸ் டெல், வளைகுடா நாடுகளின் இரண்டு டி.டி.எச் நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடனும் கமல்ஹாசன் தற்போது பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறார்.


1 கருத்து:

  1. அருமையான பதிவு... அப்பிடியே எனது தளத்திற்கும் வருகைதந்து பதிவை வாசித்தபின் follow பண்ணுங்கள் நண்பரே.. http://sajirathan.blogspot.com/

    பதிலளிநீக்கு