திங்கள், 10 டிசம்பர், 2012

கமலின் கருத்துக்கு பிரியானி தயார்: முஸ்லீம் லீக்


உலக நாயகனின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி முஸ்லிம் அமைப்புக்கள் சில எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று கமல் ஹாசன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இடம்பெறவில்லையாயின் ஜாதி மதம் பாராமல் பத்தாயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே முஸ்லிம் லீக் அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் ஜவாஹிர் அலி கருத்து வெளிடுகையில், சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத்திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் பத்தாயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக