ஞாயிறு, 17 ஜூன், 2012

பிரபஞ்சம்

நமது பிரபஞ்சத்தில் சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் சூரியனே ஆகும். ஆனால் சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியே மையம் என்று கருதப்பட்டது. நமது பிரபஞ்ச தோற்றம் பற்றி யோசிக்கும் போது நமக்குள் ஏராளமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதை யாராளும் மறுக்க முடியாது. இவை அணைத்திற்கும் பதில் தருவது என்பது என்னால் முடியாத காரியம். முடிந்தளவு நான் படித்த தேடி அலசிய விடயங்களை உங்களுடன் பகிரப் போகிறேன்.

பிரபஞ்ச தோற்றம் பற்றி பார்த்தால் அணைவராலும் ஏற்றுக்கொள்ளப்ட்ட ஒரு கோட்பாடுதான் ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory)    20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.

"Big Bang Theory" எனப்படுவது  பூச்சியத்திலிருந்து (எதுவுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து) திடீரென வெடித்து பரவியதே இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆரம்ப நிலையை ஆங்கிலத்தில் "singularity" என கூறுவர். இந்த ஆரம்ப புள்ளிக்குள் தான் பிரபஞ்சத்தின் அடிப்படையான நான்கு விசைகள் தோற்றம் பெற்றன. புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, வலிமையான அணு விசை மற்றும் ஐதான அணு விசை என்பனவே அந்த நான்கு விசைகளாகும். singularity எனப்படும் அந்த ஆரம்பபுள்ளியினுள் சமநிலையில் இந்த நான்கு விசைகளும் காணப்பட்டன. புவியீர்ப்பு விசையினால் இந்த சமநிலை உடைக்கப்பட்ட போது ஒளியை விட வேகமாக அண்டம் விரிவடைய தொடங்கியது. இந்த விரிவாக்கமானது எல்லாத்திசையிலும் சமசீராகவே நடைபெற்றது. வெடிப்பு சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் விண்மீன்களுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன. Big bang வெடிப்பு நிகழ்ந்து சுமார் 380,000ஆண்டுகளின் பிறகே முதலாவது நட்சத்திரம் தோன்றியதாக கூறபடுகிறது.

நட்சத்திரம் என்பது விண்வெளியில் இருக்கும் பெரிய ஒளிரும் கோளம் அல்லது வாயுக் கோளம் எனலாம். பல மில்லியன் வருடங்கள் உயிர் வாழும் நட்சத்திரம் ஒரு கோளமாக இருப்பதற்கு காரணம் அதிலிருக்கும் ஈர்ப்பு விசை. ஈர்ப்பு விசை ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி செயல் பட்டாலும் அது ஒரு புள்ளியில் விழாமல் இருப்பதற்கு காரணம் மைய விலக்கு அழுத்தம். இந்த இரண்டின் காரணமாக ஒவ்வொரு நட்சத்திரமும் நடுநிலையில் வாயுக்களின் கோளமாக இருக்கிறது. ஈர்ப்பு விசை வென்றால் நட்சத்திரம் சுருங்கும். அழுத்தம் வென்றால் விரிவடையும், வெடிக்கவும் செய்யும். நட்சத்திரத்தில் இருக்கும் வாயுக்கள் எரியும் போது ஈர்ப்பு விசைக்கு சமமான அளவு அழுத்தம் உண்டாகி நட்சத்திரத்தை நடுநிலை கொள்ள செய்கிறது. நட்சத்திரங்கள் எப்பொழுதும் நடுநிலையாக இருந்து விடுவதில்லை.
ஒரு நட்சத்திரத்தை சுற்றி உள்ள தூசு துணிக்கைகள் அந்த நட்சத்திரத்தின் புவியீர்ப்பு விசையினால் நெருகமடைந்து சிறிய துகள்கள் சேர்ந்து துணிக்கைகள் உருவாகின்றன. சிறிய அளவில் உள்ள துணிக்கைகள் சேர்ந்து கல்லாக மாறுகின்றன.காலபோக்கில் இவ்வாறு துணிக்கைகள் சேர்ந்து கோள்கள் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற கோள்கள் புவியீர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்களை சுற்ற ஆரம்பிக்கின்றன. இதனால் சூரிய குடும்பங்கள் தோற்றம் பெற்றன. 
பால் வீதி என்பது பல மில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும் ஒரு விண்மீன். விஞ்ஞானிகளின்  கணிப்பின்படி பிரபஞசத்தில் சுமார் 100 பில்லியன் விண்மீன்கள் உள்ளன. ஒவொரு விண்மீனிலும் சுமார் நூறு முதல் இருநூறு பில்லியன் வரையிலான நட்சத்திரங்கள் உள்ளன.
பால் வீதியின் விட்ட அளவை கணிக்க ஒளி ஆண்டு என்ற அளவு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம். ஒளி ஒரு நொடிக்கு 300,000 கிமீ செல்லும். ஒளி வருடம் என்பது 365 x 24 x 60 x 60 x 300,000 = 94,60,80,00,00,000 கிமீ . பால் வீதியின் விட்டம் கிட்டதட்ட 1,00,000 ஒளிவருடங்கள். 
பிரஞ்சத்தின் இன்றைய வயது சம்பந்தமாக பார்த்தால். பிக்பாங் நிகழ்ந்து 8 பில்லியன் வருடம் கழித்து சூரிய குடும்பம் உருவானதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.


பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து இன்று வரை விரிவடையும் வேகம் அதிகரித்து கொண்டு வரும் பிரபஞ்சம் அண்ணளவாக 13.75 பில்லியன் வருடங்கள் பழையது ஆகும். இன்று பரிணாமமடைந்து வரும் பிரஞ்சத்தில் தற்போது காணப்படும் மிகப் பெரிய பொருள் சுப்பர்கிளஸ்டர்ஸ் எனும் விசேட அண்டங்களின் கூட்டு ஆகும். தற்போது விரிவடைந்து வரும் பிரபஞ்சம் அக வெளியில் வேறு பொருள் நுழைவதை தடுப்பதுடன் புதிதாக ஈர்ப்பு விசையுடைய பொருட்கள் உண்டாவதையும் நிறுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக