திங்கள், 23 ஏப்ரல், 2012

புதன் (mercury)


முதல் பதிவில் பூமி (Earth) பற்றி பார்த்துவிட்டதால், இன்று புதன் (mercury) பற்றி பார்ப்போம். சூரியனுக்கு மிக அருகில் முதலாவது கோளாக அமைந்துள்ளதால் மிகவும் வெப்பமாக காணப்படுகின்றது.  சூரியனை நோக்கிய பகுதியில் வெப்பநிலை 800 பாகை பரனைட்டும் எதிர்ப்புறத்தில்      -300 ( மைனஸ்) பாகை பரனைட்டும் ஆகக் காணப்படுகின்றது.

புதன், கோள்களிலேயே மிகவும் சிறியதாகும். அளவில் நம் பூமியை விட 3 மடங்கு சிறியதாகும். இயற்கையாகவே புதனுக்கு துணை கோள்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2008 ஜனவரியல் அனுப்பப்பட்ட மெசஞ்சர் விண்கலம்  2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு தற்போது புதனின் துணைக்கோளாக மாறியது. இவ்விண்கலம் புதனுக்கு 2 வதாக அனுப்பப்ட்டதாகும். முதலாவதாக அனுப்பட்ட விண்கலம் மாரினர் 10 (Mariner 10) : 1974-1975.

தன்னை தானே சுற்றிக் கொள்ள 5 நாட்களும் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 ( 87 நா 23.3 ம) நாட்களும் செல்கின்றன இது பூமியை விட 59 மடங்கு அதிகமாகும்.அதனால் புதனில் இரவு பகல் மாறுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கின்றன. சூரியனைச் சுற்றி சுற்று வட்டப் பாதையில் 50 Km/s (47.8725 Km/S) வேகத்தில் பயணிக்கின்ற போதிலும் தன்னைத் தானே சுற்றும் வேகம் மிகக் குறைவு.

வளி மண்டல இயல்புகளை பார்த்தால்,

பொட்டாசியம்31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%

பௌதீக இயல்புகள்

  •  மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
  • மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ 2
  • திணிவு 3.302×1023 கிகி
  • அடர்த்தி 5.43 கி/சமீ
  • மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
  • சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
  • சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
  • சராசரி சுற்று வேகம் - 47.8725 Km/S

புதனில் கடினமான பாறைகளுடன் கூடிய தரை மேற்பரப்பில் சூரிய குடும்பம் தோன்றியதிலிருந்து இலட்சக் கணக்கான விண் கற்களும் வால் வெள்ளிகளும் மோதி வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டகுழிகள் இதன் மேற்பரப்பில் காணப்படுகின்றன. சூரியனுக்கு மிக அண்மையில் இருப்பதால் புதனைப் பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டு வந்துள்ளது எனலாம். இதன் ஆராய்ச்சி 75% க்கும் குறைவானமாக இருக்கும் என தெரிகிறது. (சரியாக தெரியவில்லை)
 

2 கருத்துகள்:

  1. நன்றி நண்பரே...

    வாண்வெளி பற்றிய இத்தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    உங்களது ஆக்கங்களை மென்மேலும் வரவேற்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா, உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் தான் என்னை இன்னும் மெருகேற்றிக்கொள்ள உதவும் என்று நம்புகின்றேன்.

      நீக்கு