ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பூமி



உயிரினங்கள் வாழ மிக பொருத்தமான கிரகம் நமது பூமியாகும். சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ளது.  பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி மூலம் சூரியனுடன் சேர்ந்து 450  கோடி வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி ஒரு பில்லியன் வருடங்களே ஆகின்றன. 
 புவியின்  மேற்பரப்பில் 71%  வரை உப்பு நீருள்ள கடலாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. மேற்பரப்பு மூலகங்களின் அளவை பார்க்கும் போது சிலிக்கன்  60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன. பூமியில் இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும்அலுமினியம் (1.4%), மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது, மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகம் எனலாம்.
பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365 1/4 நாட்கள்
சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுழல்கிறது
சுற்றளவு (கிடை அச்சில்) - 40 075.02 Km
பூமியின் நிறை ஏறக்குறைய 5.98×1024 Kg
நீள் கோள மேற்பரப்பளவு - 510 072 000 Km2
சராசரி அடர்த்தி - 5.5153 g/cm3
 
துணைக் கோள் - 1 (சந்திரன்)

535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்க எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியை போன்ற பாலுண்ணிகள் மட்டுமே.

புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது  மேலும் இச்சூழல் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 கருத்துகள்:

  1. ஆஸ்திகத்தையும் நாத்திகத்தையும்விட மனிதமே மேலானது எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    நன்று.
    ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்பதுதான் நாத்திகத்தின் அடிப்படைக் கொள்கையே’ என்பதைத் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா, உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன், நீங்கள் என் தளத்திற்கு வந்ததே எனக்கு மிகப்பெரிய சந்தோசம். நன்றி நன்றி

      நீக்கு