வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஆறு கால்களுடன் பிறந்த குழந்தை


பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்ததில் உள்ள சுக்கூரைச் சேர்ந்த 31 வயதான இம்ரான் அலி ஷேக் மற்றும் 27 வயதான அவரது தனைவி அப்ஷான் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இம்மாதம் 12ம் திகதி அறுவை சிகிச்சை மூலம் அப்சராவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் உடலில் 6 கால்கள் இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.


எக்ஸ்ரே டெக்னீஷியனாக தொழில் புரியும் இம்ரானுக்கு குழந்தை சிகிச்சைக்காக செலவிட முடியாத நிலையில் சிந்த் மாகாண ஆளுனர் செலவை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து குழந்தை கராச்சியில் உள்ள தேசியக் குழந்தைகள் சுகாதார நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு ஐசியுவில் வைக்கப்பட்டது.


தற்போது பிறந்துள்ள குழந்தையுடன் பிறந்த மற்றுமொறு குழந்தை வளர்ச்சியடையாததால் அதன் உடல் பாகங்களும் சேர்த்து இக்குழந்தைகப்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஐந்து பேர் கொண்ட விஷேட மருத்துவ குழுவினரால் இந்த குழந்தையின் உடம்பில் உள்ள மேலதிக 4 கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்கள். பாகிஸ்தானில் இப்படி ஒரு குழந்தை பிறந்தது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





  

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக