வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் வெற்றிகரமாக முடிந்தது



ஹிந்தியில் வெளியாகியுள்ள கமலின் விஸ்வரூப் முதல் காட்சி டில்லியில் முடிந்து ரசிகர்கள் வெளியே வந்து விட்டனர். டில்லியில் மட்டும் படம் 20 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தன.
 
ரசிகர்கள் மனநிலை எப்படி உள்ளது என தியேட்டர் வாசலில் அசெஸ்மென்ட் செய்து வெளியிட்டுள்ள CNN-IBN, “ரசிகர்கள் புன்னகையுடன் வெளியே வந்தார்கள். படத்தில் இஸ்லாத்துக்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ காட்சிகள் ஏதுமில்லை. படம் சூப்பராக உள்ளது” என்று கூறியுள்ளது.
இந்த படம் தேசிய விருதுகளை நிச்சயம் வெல்லும். இந்திய திரையுலகையே விஸ்வரூபம் அசைத்துக் காட்டும்” என்ற காமென்ட்டையும் CNN-IBN வெளியிட்டுள்ளது.

“படத்தில் இஸ்லாத்துக்கு எதிரான காட்சிகள் இருந்தால் தடைசெய்யப்படும்” என அறிவிக்கப்பட்ட உத்திரபிரதேசத்திலும், முதலாவது காட்சி எந்தவிட இடையூறும் இன்றி ஓடி முடிந்துள்ளது.
டில்லி தியேட்டர்களுக்கு முன் பெரியளவில் விளம்பரங்கள் ஏதுமில்லை. தியேட்டர் இணைத்தளத்தில்தான் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பு இருந்தது. ஆனால், முதல்நாள் ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவில் உள்ளதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

படத்துக்கு தடை என வெளியான செய்திகள், அட்டகாசமான விளம்பரத்தை கொடுத்துள்ளன. தமிழகத்துக்கு வெளியே விஸ்வரூபம், எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை பெறும் என்கிறார்கள்.

 நன்றி விறுவிறுப்பு 

புதன், 30 ஜனவரி, 2013

அரசியல் சூழ்ச்சி இது - கமல்ஹாசன்



“இன்று விஸ்வரூபம் படத்தின் தடை விலக்கப்படாவிட்டால், இந்த வீட்டையும் நான் இழக்க நேரிடும். நான் எனது சகல சொத்துக்களையும் இழப்பேன். தமிழகத்தை விட்டு வெளியேறுவேன். வேறு ஒரு மாநிலத்தில் வாழ்வதற்கு உகந்த இடம் தேடுவேன். அதுவும் கிடைக்கவில்லை என்றால் வெளிநாடு செல்வேன்” என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

நான் தமிழகத்தில் வாழ்வது பற்றி இன்று மதியம் தெரிந்துவிடும்.
இங்கு நடப்பவை அனைத்துக்கும் யார் காரணம் என்று என்னைக் கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியும். யார் காரணம் என்று உங்களுக்கே தெரியும். அரசியல் சூழ்ச்சி ஒன்றில் நான் சிக்கியிருப்பதாக நினைக்கிறேன்.
ஏன் தமிழகத்தை விட்டு வெளியேற நினைக்கிறேன் என்று கேட்கிறீர்களா? நானல்ல, நான் வெளியேற வேண்டும் என்று ‘தமிழகம்’ நினைக்கிறது!” என்றார் அவர்.

கமல் ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்றே தெரிகிறது. “என்னை வீழ்த்தலாம் என்று நினைக்காதீர்கள். வீழ்ந்தாலும், விதையாக வீழ்வேன். வளர்வேன். லட்சக்கணக்கான பறவைகள் வந்து அமரும் மரமாக மாறுவேன்” என்பது, கமல் ஒரு ‘முடிவு’ எடுத்திருப்பதை காட்டுகிறது.

நன்றி : விறுவிறுப்பு 

உண்மையாகவே வேதனையாக இருக்கின்றது. தமிழனுக்கு தமிழ் நாட்டில் இந்த நிலையா........... இதையெல்லாம் பார்க்கும் போது இது கமலுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை இல்லை  ஜே யின் தலையீட்டால்  உள்ள பிரச்சினை என்பது தெளிவு. அனால் தமிழர்கள்  நினைத்தாள் எதையும் சாதிக்கலாம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அமெரிக்காவில் விஸ்வரூப வசூல்



விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடையைச் சந்தித்து, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் தடையைச் சந்தித்த போதிலும், வெளிநாடுகள் சிலவற்றில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை, கிளம்பிய எதிர்ப்பு ஆகியவற்றால் கவரப்பட்ட ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தைக் காண அரங்குகளில் குவிந்து வருகின்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், சராசரி ஆங்கிலப் படங்களின் முதல்வார வசூல் சாதனையை விஸவரூபம் அமெரிக்காவில் முறியடித்துள்ளதாம்.


பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக தற்போதும் லண்டனில் விஸ்வரூபம் திரைப்படம் ஓடுகிறது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்படாமல் இருந்தால் விஸ்வரூபம் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

‘யுஎஸ் பாக் ஆபிசை’ப் பொறுத்த வரையில் படம் வெளியான சென்ற வார இறுதியில் 6,34,912 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 43 லட்ச ரூபாய். இது சென்ற வாரத்திய அதாவது மூன்று நாள் நிலவரம் மட்டுமே.

சனி, 26 ஜனவரி, 2013

“விஸ்வரூபம் விஷயத்தில் ஏன் பதுங்குகிறீர்கள் சக கலைஞர்களே?” பாரதிராஜா கேள்வி!


“தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று ஆச்சரியப்பட்டுள்ளார், இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநர் பாரதி ராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு கலைஞன் என்பவன் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சுறுதியோடு, பாரதியைப் போல சமூக விழிப்புணர்வுக்காக போராடுபவன். எழுத்தாளராகட்டும், கவிஞராகட்டும், திரைப்பட கலைஞனாகட்டும், எந்த துறையின் விமர்சகனுமாகட்டும், ஒரு படைப்பாளியாக துணிச்சலுடன் தன் கருத்தை பதிவு செய்பவனாக இருக்கவேண்டும். அதுதான் அவன் பொது வாழ்வின் சமூகக் கடமை.
பயந்து ஒளிபவன் படைப்பாளியாக, எழுத்தாளனாக, கலைஞனாக இருக்க முடியாது.
ஆனால் தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா?
திரையுலகில் இத்தனை அமைப்புகள் இருந்தும், அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பதாலோ, அல்லது தனிப்பட்ட மன மாச்சரியங்களாலோ யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இன்று கமல்ஹாசனுக்குத்தானே தலைவலி, வயிற்று வலி என்று நினைத்தால், நாளை நம்மில் ஒருவருக்கு இதே நிலை வரும் போது நிவாரணத்துக்கு யாரைத் தேடுவீர்கள்? எங்கே போவீர்கள்?
நமக்குள் ஒற்றுமை இல்லை.
கமல் என்ற தமிழ்க் கலைஞன் வியாபாரத்திற்காக தன்னை ஒரு போதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன், மூட நம்பிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் திரையுலகில் மீசை வைக்காத பாரதியார். அவன் இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று படம் எடுப்பானா?
ஒரு முஸ்லீம் அங்கத்தினர் உட்பட தணிக்கைக் குழு அங்கீகரித்த ஒரு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால், இந்த அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை. இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண, குடிமகனை கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.
ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை, தமிழ்த் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.
என் இனிய தமிழ் மக்களே, நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள், சிந்தித்துப் பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி VIRUVIRUPPU

வெள்ளி, 25 ஜனவரி, 2013

வி‌ஸ்வரூப‌ம் டி‌க்கெ‌ட் கட்டண‌‌த்தை கொடு‌க்‌கிறது ‌தியே‌ட்ட‌ர்க‌ள்


வி‌ஸ்வரூப‌ம் பட‌த்த‌ை ‌‌ரி‌லீ‌ஸ் செ‌ய்ய 15 நா‌ட்க‌ள் தடை ‌வி‌தி‌த்து த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டது. இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து ர‌ா‌ஜ் க‌ம‌ல் ‌நிறுவன‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்‌கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், 26ஆ‌‌ம் தே‌தி அதாவது இ‌ன்று, பட‌த்தை பா‌ர்‌த்து 28ஆ‌ம் தே‌தி ‌தீ‌ர்‌‌ப்பு அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌த்தது. ஏ‌ற்கனவே ‌வி‌ஸ்வரூப‌ம் 25.01.2013 இ‌ன்று வெ‌ளியாகு‌ம் எ‌ன்று ‌விள‌ம்பர‌ங்க‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, ர‌சிக‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ஏராளமானவ‌ர்க‌ள் ‌தியே‌ட்ட‌ர்க‌ளி‌ல் நே‌ரிடையாகவு‌ம், இணையதள‌ம் மூலமாகவு‌ம் டி‌க்கெ‌ட் வா‌ங்‌கின‌ர். இ‌ந்த‌ நிலை‌யி‌ல் த‌மிழக அர‌சி‌ன் ‌திடீ‌ர் தடையா‌ல், ‌வி‌ஸ்வரூப‌ம் வெ‌ளியாகு‌ம் ‌தியே‌ட்ட‌ர் உ‌ரிமையாள‌ர்க‌ள், டி‌க்கெ‌ட் வா‌ங்‌கியவ‌ர்களு‌க்கு பண‌த்தை இ‌ன்று முத‌ல் ‌திரு‌ம்ப கொடு‌க்‌கிறது.

செ‌ன்னை, சேல‌ம் உ‌ள்பட ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று காலை 11 ம‌ணி‌‌க்கு கவு‌ண்ட‌ர்க‌ளி‌ல் டி‌க்கெ‌ட்டு‌க்கான பண‌த்தை ‌திரு‌ம்ப பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று ‌தியே‌ட்ட‌ர் உ‌ரிமையாள‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வியாழன், 24 ஜனவரி, 2013

கமலுக்கு பெருகும் ஆதரவு

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசு அந்தப் படத்தையே தடை செய்துள்ளது. 
இது கமலுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமலுக்கு ஆதரவான சூழல் திரும்பியுள்ளது. திரையுலகினர் இந்தத் தடை குறித்து வெளிப்படையாக வாய் திறக்காத சூழலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது. 
 கமலை ஆதரிக்கக் கோரி பலரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐ சப்போர்ட் கமல் எனும் வாசகங்களுடன் சமூகத் தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டிடிஎச், திரையரங்க உரிமையாளர்கள் விவகாரத்தின்போது அமைதி காத்த சினிமாக்காரர்கள், இப்போது கமலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுக்க வேண்டியது அவசியம் என பேச ஆரம்பித்துள்ளனர். 
இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் - கம் - இயக்குநர், "நிச்சயம் கமல் பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு இதற்கு மேல் சிக்கல் இருக்க முடியாது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்தை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு திரையுலகினர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமலிருக்கக் காரணம் இதுதான்.
 ஆனால் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் இதுபோன்ற தடைகளை திரையுலகினர் இப்போது எதிர்க்காவிட்டால், சினிமாவில் புதிய முயற்சி என்பதே அருகிவிடும்," என்றார் (தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்).
 நன்றி ONE INDIA

இந்த பிரச்சினை குறித்து ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் ஒன்றிணைந்து செயற்படும்போது தமிழக சினிமாவும் தமிழர்களும் மௌனமாக இருப்பது வேதனையளிக்கின்றது. ஏன் தமிழர்களிடம் இந்த ஒட்ற்றுமை இல்லை .



வியாழன், 13 டிசம்பர், 2012

ஏர்டெல் டி.டி.எச் இல் விஸ்வரூபம்

எதிர்வரும் ஜனவரி 11-ந்தேதி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருகிறது. இதை தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ஏர்டெல் டி.டி.எச்-ல் காண முடியும் என கமல்ஹாசன் தரப்பு தெரிவித்துள்ளது.

கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' தியேட்டர்களில் வெளியிடப்படும் அதே நாள் டி.டி.எச் இலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படிச் செய்வதின் நோக்கம் திருட்டு  டிவிடி ஐ ஒழிப்பதுதான் என கமல்ஹாசன் கூறினார்.
இதனை தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்கை, ஏர்டெல், ரிலையன்ஸ், வீடியோகான் உள்பட பிரபலாமன டி.டி.எச் நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டின. இதனால் கடும் போட்டி நிலவியது.
இறுதியாக டி.டி.எச். ஒளிபரப்பு உரிமையை ஏர்டெல் நிறுவனம் வாங்கியது. எனவே வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச். வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.வி.க்களில் கண்டு களிக்கலாம்.
ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.
சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் படமானது உள்நாட்டு டி.டி.எச். நிறுவனங்களைத் தவிர மலேசியாவின் ஆஸ்ட்ரோ, சிங்கப்பூரின் பிரபல சிஸ் டெல், வளைகுடா நாடுகளின் இரண்டு டி.டி.எச் நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடனும் கமல்ஹாசன் தற்போது பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறார்.