புதன், 30 மே, 2012

சனி (கோள்)


சனி (SATURN) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். ரோமானியர்களின் விவாசாயத்திற்கு உதவும் மிக முக்கிய கடவுளின் பெயரான Saturn எனும் பெயரைக் கொண்டுள்ளது.

சனி கோளானது சூரியனுக்கு அருகில் வரும்போது 840,000,000 கி.மீட்டர் தொலைவிலும், தூரத்தில் இருக்கும் போது 940,000,000 கி.மீட்டர் தொலைவிலும் இருக்கும். இது சூரியனைச் சுற்றிவர 10,759 நாட்கள் ஆகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 10 மணி 39 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. சனிக் கிரகத்தின் ஆரை பூமியை விட 9 மடங்கு அதிகம் என்ற போதும் அதன் அடர்த்தி பூமியை விட 8 மடங்கு குறைவாகும். அடர்த்தி குறைவு காரணமாக சனிக்கிரகத்தை தண்ணீரில் இட்டால் அது மிதக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும் சனிக்கிரகம் மிகப் பெரிய கனவளவைக் கொண்டிருப்பதால் இதன் நிறை பூமியை விட 95 மடங்கு அதிகம்.

சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.

சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், அதிகளவில் பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆன வளையங்கள் 6630 Km இலிருந்து 120 700 Km வரை நீண்டு காணப்பட்ட போதும் இவற்றின் தடிப்பு மிகக் குறைவாக அதாவது வெறும் 20 மீற்றர் மற்றும் தோலின் மாசுக்கள் கொண்ட 93 சதவிகிதம் நீர்-பனி உள்ளது . மீதமுள்ள 7 சதவிகிதம் பளிங்குருவில்காபன் உள்ளது . வளையங்களில் சிறு புள்ளியிலிருந்து ஒரு வாகனத்தின் அளவு கொண்ட துணிக்கைகள் உள்ளன.சனியின் வளையங்களின் உருவாக்கம் குறித்து இருவேறு கோட்பாடுகள் உள்ளன .சனி உருவாகிய வான்புகையுருவின் எஞ்சிய பொருட்களே இவ்வளையங்கள் என்கிறது இன்னொரு கோட்பாடு. 

சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனியைச் சுற்றி அறுபத்தி ஒரு நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை (இடை அளவில்) மிக பெரிய நிலவான டைட்டன் பங்களிக்கிறது. சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது. மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை: 10 கிமீ விட்டத்தின் கீழ் முப்பத்து நான்கு நிலவுகள் மற்றும் 50 கிமீ விட்டத்தின் கீழ் பதினான்கு நிலவுகளும் இருக்கின்றன. சம்பிரதாயமாக, அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன.

சனியை ஆராய்ந்த விண்கலங்கள் பற்றிப் பார்த்தால், நாசாவின் பயனீர் 11 விண்கலமும் அதன் பின்னர் வொயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்களும் இறுதியாக 2004 இல் கஸ்ஸினி விண்கலமும் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் கஸ்ஸினி செய்மதி மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. இதன் பணிகள் 2008 இல் முடிவடைந்த போதும் பின்னர் இச்செய்மதியின் ஆய்வுப்பணி 2010 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு தற்போது 2017 வரை இதன் காலம் விரிவு படுத்தப்பட்டது. கஸ்ஸினி விண்கலம் சனியின் வளையங்கள் அதன் துணைக் கோள்கள் பற்றிப் பல தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது மட்டுமல்லாமல் சனியின் 8 புதிய துணைக் கோள்களையும் கண்டு பிடித்திருந்தது.

சனிக்கிரகம் பற்றிய சுருக்கமான தகவல்கள்

சுற்றுப்பாதை சிறப்பியல்புகள்

சராசரிஆரம் -1,426,725,400 கி.மீ
வட்டவிலகல் - 0.05415060
சுற்றுக்காலம் - 29y 167d 6.7h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம் (Synodic Period) - 378.1 days
சராசரி சுற்றியக்க வேகம் - 9.6724 km/s
சுற்றுப்பாதையின் சாய்வு - 2.48446°
துணைக்கோள்களின் எண்ணிக்கை - 61

வளிமண்டல சிறப்பியல்புகள்
வளிமண்டல அழுத்தம் 140 kPa
ஹைட்ரசன் >93%
ஹீலியம் >5%
மீத்தேன் 0.2%
நீர் ஆவி 0.1%
அம்மோனியா 0.01%
ஈத்தேன் 0.0005%
பாஸ்பேன் 0.0001%


புறநிலை சிறப்பியல்புகள்

நடுவரைக்கோட்டு விட்டம் 120,536 km
புறமேற் பரப்பளவு 4.38×1010 km2
நிறை 5.688×1026 kg
சராசரிஅடர்த்தி 0.69 g/cm3
மேற்பரப்புஈர்ப்பு 8.96 m/s2
சுழற்சிக் காலம் நடுவரைக்கோட்டு 10h 13m 59s
சுழற்சிக் காலம் internal 10h 39m 25s
அச்சின் சாய்வு 26.73°
எதிரொளிப்பு திறன் 0.47
விடுபடு வேகம் 35.49 km/s
சராசரி மேல்மேக வெப்பநிலை 93K
மேற்பரப்புவெப்பநிலை  min   mean     max
                                             82K   143K       N/A K 
முடிந்தளவு சனிக் கோள் பற்றி தேடி எழுதியிருக்கிறேன். கோள்கள் பற்றி இன்னும் எவ்வளவோ ஆராய்ந்து பார்க்கவும் இருக்கின்றது. ஆனால் நம்மாள் ஒரே  இடத்தில் இருந்து கொண்டு ஜோதிடம் என்ற பெயரில் மோசடி செய்கின்றார்கள். இதில் என்ன கவலை என்றால் நன்கு படித்தவர்களும் இதை நம்புகின்றார்கள் என்பதுதான். 

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக