செவ்வாய், 5 ஜூன், 2012

யுரேனஸ்

 
பூமியை விட மூன்று மடங்கு பெரிய கனவளவை உடைய யுரேனஸ் சூரிய மண்டலத்தின் ஏழாவது கோளாகவும் விட்டத்தின் அடிப்படையில் மூன்றாவது மிகப் பெரிய கோளாவும் அமைந்துள்ளது. இந்த கிரகம் 1781 ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷெல் என்பவரால் கண்டறியப்பட்டது. இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை. இதுவரை 27 துணைக் கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாதவை பல இருக்கக்கூடும்.
 
பூமியுடன் ஒப்பிடும் போது


வியாழனைப் போன்றே மிகப் பெரிய வாயுக் கோளான யுரனேஸ் இன் வளி மண்டலத்தில் ஐதரசன்,ஹீலியம், மெத்தேன் ஆகிய வாயுக்கள் பெருமளவு காணப்படுகின்றன. யுரேனஸில் வெறும் 2% வீதமே மெத்தேன் வாயு காணப்பட்டாலும் தொலைக் காட்டியால் நோக்கும் போது அதன் மேற்பரப்பு அழகிய நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் தென்படுவதற்கு இவ்வாயு காரணமாகின்றது. இதனைச் சுற்றி 11 வளையங்கள் காணப்படுகின்ற போதிலும் இவ்வளையங்கள் மிக மெல்லியதாக இருப்பதால் ஹபிள் போன்ற வினைத் திறன் மிக்க விண் தொலைக்காட்டிகளால் மட்டுமே இவை அவதானிக்கப் பட முடிவதுடன் வெறும் கண்களுக்கோ சாதாரண தொலைக்காட்டிகளுக்கோ இவை புலப்படுவதில்லை.

இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகிறது. இது தன்னைத் தானே ஒருமுறை சுற்ற 17 மணி 14 நிமிடங்கள் ஆகிறது. . யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

வெள்ளியைப் போன்றே யுரேனஸும் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் போதும் தனது அச்சில் 90 பாகை சாய்வில் ஏறக்குறைய நீள்வட்டப்பாதையில் வலம் வருவதால் அது சூரியனைச் சுற்றி வரும் அதே பக்கத்தில் வடக்கிலிருந்து தெற்காக சுழலுவது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. மேலும் இத்தகைய முரணான தன்மை காரணமாக அங்கு பருவ காலங்கள் 20 வருடங்களுக்கு ஒரு முறையே மாறுகின்றன. யுரேன்ஸின் மேற்பரப்பிலும் வியாழன் மற்றும் சனி கிரகங்களைப் போலவே மிக வேகமாக கிட்டத்தட்ட 900Km/h வேகத்தில் காற்று வீசி வருகின்றது.

சுருக்கமான தகவல்கள்
  • சராசரி ஆரம் 2,870,972,200 km
  • வட்டவிலகல் 0.04716771
  • சுற்றுக்காலம் 84y 3d 15.66h
  • பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
  • (Synodic Period) 369.7 days
  • சராசரிச் சுற்றுவேகம் 6.8352 km/s
  • சாய்வு 0.76986°
  • உபகோள்களின் எண்ணிக்கை 27
  • மையக்கோட்டு விட்டம் 51,118 km
  • மேற்பரப்பளவு 8,130,000,000 km2
  • திணிவு 8.686×1025 kg
  • சராசரி அடர்த்தி 1.29 g/cm3
  • மேற்பரப்பு ஈர்ப்பு 8.69 m/s2
  • சுழற்சிக் காலம் -17h 14m
  • அச்சுச்சாய்வு 97.86°
  • வெண் எகிர்சிதறல் 0.51
  • தப்பும்வேகம் 21.29 km/s
  • ஐதரசன் - 83%
  • ஹீலியம் - 15%
  • மெத்தேன் - 2.3%
  • ஐதரசன் டெயூடெரைட் (HD) - 0.009% 
கடந்த 2006 ஆம் ஆண்டு ஹபிள் தொலைக் காட்டியால் யுரேனஸின் வட துருவத்தில் மிகப் பெரிய கரும் பொட்டு ஒன்றை அவதானித்தது. சுமார் 1700 Km நீளமும் 3000 Km அகலமும் உடைய இந்த கரும் பொட்டு பின்னர் வளிச் சுழல் எனத் தெளிவு படுத்தப் பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக